KCNA: அமெரிக்காவிற்கு எதிராக பழிவாங்கும் போருக்கு வடகொரிய மக்கள் தயார்!

Wed, 28 Jun 2023-8:06 am,

கொரியப் போர் தொடங்கிய 73வது ஆண்டு நிறைவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 25) வடகொரியாவில் பேரணிகள் நடத்தப்பட்டதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிற்கு எதிரான 'பழிவாங்கும் போர்' தொடுக்க வட கொரிய தலைநகரான பியாங்யாங்கின் மேடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்துக் கொண்ட பொதுமக்கள் உறுதிமொழி எடுத்தனர் என KCNA செய்தி வெளியிட்டது

மைதானம் முழுவதும் அமெரிக்க எதிர்ப்பு பேனர்கள் காணப்பட்டன. "அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்ட தினத்தை" குறிக்கும் பேரணிகளில், "அமெரிக்காவின் நிலப்பரப்பு முழுவதும் எங்கள் துப்பாக்கிச் சூடு எல்லைக்குள் உள்ளது" மற்றும் "ஏகாதிபத்திய அமெரிக்கா, அமைதியை அழிப்பவர்கள்" என்று எழுதப்பட்ட பாதகைகளை கைகளில் ஏந்தியிருந்தனர் 

கொரியப் போர் ஜூன் 25, 1950 அன்று வெடித்தது, 135,000 வட கொரியப் படைகள் மொத்த கொரிய தீபகற்பத்தையும் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டது

கொரியப் போர் மூன்று ஆண்டுகள் நீடித்ததாகக் கூறப்பட்டாலும், தொழில்நுட்ப ரீதியாகப் போர் இன்னும் முடிவடையவில்லை.

ஜூன் 27, 1953 இல், கொரிய தீபகற்பத்தில் ஐக்கிய நாடுகள் சபையில், வட கொரிய இராணுவம் மற்றும் சீன துருப்புக்களால் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. தென் கொரியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை, இது ஒரு சமாதான ஒப்பந்தம் அல்ல, மாறாக "போர் நிறுத்தம்" என்றும் குறிப்பிடுகிறது.

மூன்று வருட கொரியப் போரில், வட கொரியாவில் பதிப்பு வேறுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link