ஜனவரியில் மீண்டும் அகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஊதிய உயர்வு
மத்திய அரசு ஊழியர்கள் பல வித செய்திகளுக்காக காத்திருக்கிறார்கள். அவற்றில் ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி உயர்வு, 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பு, 18 மாத டிஏ அரியர் தொகை ஆகியவை அடங்கும். இவற்றில் ஜனவரி டிஏ உயர்வு குறித்த ஒரு முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
7வது ஊதியக்குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணமும் புத்தாண்டில் மீண்டும் ஒரு முறை உயரவுள்ளன. ஜனவரி மாதம் ஊழியர்களுக்கு அகவிலப்படி எவ்வளவு அதிகரிக்கும்?
ஆண்டுக்கு 2 முறை கோடிக்கணக்கான மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரண விகிதங்கள் திருத்தப்படுகின்றன. முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில் ஜனவரி மாத அகவிலைப்படியும், ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜனவரி மாத அகவிலைப்படியும் நிர்ணயிக்கப்படுகின்றன.
ஜனவரி 2024 -இல் ஊழியர்களின் அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டது. ஜூலை மாதம் டிஏ உயர்வு 3% ஆக இருந்தது. இதைத் தொடர்ந்து தற்போது மத்திய அரசு ஊழியர்களின் மொத்த டிஏ மற்றும் ஓய்வூதியதாரர்களின் டிஆர் ஆகியவை 53% ஆக உள்ளன.
ஜூலை 2024 முதல் டிசம்பர் 2024 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் தரவுகளின் அடிப்படையில் ஜனவரி மாத அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) தீர்மானிக்கப்படும். இதற்காக ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
புதிய ஆண்டில் ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்படும். தற்போது 48 லட்சம் ஊழியர்கள் உட்பட 68 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 53% அகவிலைப்படியாக வழங்கப்படுகிறது. அகவிலைப்படியின் அடுத்த அதிகரிப்பு ஜனவரி 2025 இல் செய்யப்படும்.
ஜனவரியில் அகவிலைப்படி மூன்று சதவீதம் அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீடு 141.5 ஆகும். இதன் மூலம் டிஏ மதிப்பெண் 54.49ஐ எட்டியுள்ளது. சமீபத்தில் தொழிலாளர் அமைச்சகம் அக்டோபர் மாத ஏஐசிபிஐ குறியீட்டு எண்களை வெளியிட்டது. அக்டோபர் மாத எண்கள் 1.2 புள்ளிகள் அதிகரித்துள்ளன.
டிசம்பர் 2024 -க்குள் குறியீடு 144.45 -ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் மாத ஏஐசிபிஐ எண்கள் வந்தபிறகு, அகவிலைப்படியில் 3% அதிகரிப்பு காணப்படலாம் என்றும் மொத்த அகவிலைப்படி 56% ஆக அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
சம்பள உயர்வு: ஊழியர்களின் அடிப்படை ஊதியம் (Basic Salary) ரூ.18,000 ஆகவும், அகவிலைப்படி 56% ஆகவும் இருந்தால், கணக்கீடு இப்படி இருக்கும்: ஜனவரி 2025 முதலான டிஏ: ரூ.18,000 x 56% = ரூ.10,080/மாதம் / ஜூலை 2024 வரையிலான டிஏ: ரூ.18,000 x 53% = ரூ.9,540/மாதம். 3% அதிகரிப்புக்குப் பிறகு சம்பளத்தில் காணப்படக்கூடிய மாற்றம் - மாதத்திற்கு ரூ.540.
அகவிலைப்படியுடன் சேர்த்து ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணமும் அதிகரிக்கப்படும் என்பதால், ஓய்வூதியதாரர்களின் மாத ஓய்வூதியத்திலும் மிகப்பெரிய ஏற்றம் காணப்படும்.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி மற்றும் பணவீக்கத்தை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு டிஏ மற்றும் டிஆர் வழங்கப்படுகின்றன. இது ஊழியர்களின் ஊதியத்தில் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகின்றது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.