ஓய்வூதியதாரர்களுக்கு டிஆர் உயர்வு: அரியர் தொகை எவ்வளவு? யாருக்கெல்லாம் ஓய்வூதியம் அதிகரிக்கும்?

Thu, 28 Nov 2024-4:33 pm,

பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம், அகவிலை நிவாரண நிலுவைத் தொகை விவரங்கள், ஓய்வூதியம் பெறுபவர்களின் வகைகள் மற்றும் பிற முக்கிய தகவல்களைக் கோடிட்டுக் காட்டும் அலுவலக குறிப்பாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் உள்ள தகவல்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

ஜூலை 1, 2024 முதல், மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவை சம்பளம் மற்றும் அடிப்படை ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியத்தில் 50% இலிருந்து 53% ஆக உயர்த்தப்பட்டது. இது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது. இந்த உயர்வு யாருக்கெல்லாம் கிடைக்கும்? விவரங்களை இங்கே காணலாம்.

சிவில் ஓய்வூதியம் பெறுவோர் (Civilian Pensioners): முந்தைய உத்தரவுகளின்படி மத்திய அரசின் ஓய்வூதியதாரர்கள் மட்டுமல்லாமல், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் இருந்து ஓய்வூதியம் பெறுபவர்களும் இதில் அடங்குவர். பாதுகாப்பு சேவை மதிப்பீடுகளின் கீழ் உள்ளவர்கள் உட்பட ஆயுதப்படை ஓய்வூதியம் பெறுவோருக்கு (Armed Forces Pensioners) இது கிடைக்கும்.

பல்வேறு அகில இந்திய சேவைகளில் உள்ள ஓய்வூதியம் பெறுபவர்களை அடக்கிய அகில இந்திய சேவை ஓய்வூதியதாரர்களும் (All India Service Pensioners) இந்த உயர்வால் பயனடைவார்கள். ரயில்வே ஓய்வூதியதாரர்களில் (Railway Pensioners) குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் ரயில்வே துறையில் இருந்து ஓய்வு பெற்றவர்களும் அடங்குவர். இவர்களுக்கும் அதிகரித்த ஓய்வூதியம் கிடைக்கும்.

ப்ரொவிஷனல் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் (Provisional Pensioners) இந்த டிஆர் உயர்வு கிடைக்கும். இவர்களைத் தவிர பர்மா சிவிலியன் ஓய்வூதியதாரர்கள் (Burma Civilian Pensioners), அதாவது பர்மாவில் இருந்து வந்த ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்த அரசாங்க ஓய்வூதியம் பெறுபவர்கள் திருத்தப்பட்ட அகவிலை நிவாரணத்தைப் பெறுவார்கள்.

ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும் போது, டிஆர் -க்கான நிலுவைத் தொகையை செலுத்துவதன் காலக்கெடு குறித்தும் குறிப்பாணை குறிப்பிடுகிறது. கூடுதலாக, DR இன் ஃப்ராக்ஷனல் தொகை அடுத்த முழு ரூபாய்க்கு ரவுண்ட் ஆஃப் செய்யப்படும்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உட்பட ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளே தனிப்பட்ட ஓய்வூதியதாரருக்கு சரியான அகவிலை நிவாரண தொகையை கணக்கிடுவதற்கு பொறுப்பாவார்கள்.

புதிய விகிதங்கள் அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும். ஆனால் மீண்டும் பணியமர்த்தப்பட்ட ஓய்வூதியம் பெறுவோர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் போன்றவர்களுக்கான சில விதிகள் மாறாமல் இருக்கும் என்று குறிப்பாணை தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் ஓய்வு பெற்ற நீதிபதிகள் விஷயத்தில், தனித்தனி உத்தரவுகளை நீதித்துறை பிறப்பிக்கும். இந்த DR அதிகரிப்பு நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு ஏற்ப வருகிறது. மேலும், கம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரலின் (CAG) ஆலோசனையின் பேரில் வெளியிடப்பட்டுள்ளது.

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link