7th Pay Commission: இந்த ஊழியர்களின் போனஸ் குறித்த முக்கிய செய்தி: அரசு கூறியது என்ன?

Mon, 30 Aug 2021-1:53 pm,

நவராத்திரி நேரத்தில் கிடைக்கும் போனஸ் பற்றிய சலசலப்பு தற்போது தொடங்கி விட்டது. கடந்த ஆண்டைப் போலவே, இம்முறையும், 78 நாட்களுக்கான போனஸ் தொகையாக, ரூ. 17951 அவர்களது கணக்கில் சேரக்கூடும் என்று நம்பப்படுகிறது.

ஊழியர்களுக்கு போனஸ் கிடைப்பதோடு, ஜூலை மாத அகவிலைப்படியும் அவர்களது ஊதியத்தில் சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, இப்போது வரும் ஊதியத்தில், போனஸ் மற்றும் அகவிலைப்படியின் தொகையும் சேர்ந்து வரும்.

ரயில்வே ஊழியர்கள் சமீபத்தில் 11 சதவிகிதம் அதிகரித்த அகவிலைப்படியின் பலனைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2020 ஜனவரியில் இருந்து காத்திருந்த ஊழியர்களின் அகவிலைப்படி மீதான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. அதன் பிறகு DA 17 ல் இருந்து 28 சதவீதமாக அதிகரித்துள்ளது. இப்போது ஜூலை 2021 ஆம் ஆண்டில், DA மூன்று சதவீதம் அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதன் மூலம், ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 31 சதவீதமாக மாறும்.

 

தன்பாத் ரயில்வே பிரிவு ஜார்க்கண்ட், பீகார், உத்தரபிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் 22222 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஊழியர்கள் அனைவரும் பண்டிகைக்கு முன் போனஸ் நன்மையைப் பெறுவார்கள். ஒவ்வொரு ஊழியரும் கடந்த ஆண்டைப் போல ரூ .17951 போனஸாகப் பெற்றால், சுமார் ரூ .39 கோடியே 90 லட்சம் ரூபாய் மட்டும் போனஸ் தொகையாக விநியோகிக்கப்படும். இப்போது இதனுடன், டிஏ தொகையும் கிடைக்கும். அகவிலைப்படியின் தொகை, ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊதியத்தின் அடிப்படையில் இருக்கும். அதாவது, இந்த நவராத்திரி இந்த ரயில்வே ஊழியர்களுக்கு அசத்தலான நவராத்திரியாக இருக்கப் போகின்றது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link