ஜனவரியில் அகவிலைப்படி எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்

Thu, 12 Dec 2024-8:54 am,

7வது ஊதியக்குழு: ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய பேச்சுகள் இப்போது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இடையே சூடுபிடித்துள்ளன. ஊழியர்களும் ஓய்வூதியம் பெறுவோரும் 3% சாத்தியமான உயர்வை எதிர்பார்க்கின்றனர். தொழில்துறை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (ஏஐசிபிஐ-ஐடபிள்யூ) தரவுகளின் அடிப்படையில், ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் ஆண்டுக்கு இரண்டு முறை டிஏவை அரசாங்கம் மதிப்பாய்வு செய்கிறது.

அகவிலைப்படி சதவீதத்தை தீர்மானிப்பதில் ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் (AICPI Index) ஒரு முக்கியமான காரணியாக உள்ளன. இந்த குறியீடு நாடு முழுவதும் நுகர்வோர் விலை மாற்றங்களைக் கண்காணித்து மாதாந்திர தரவை வெளியிடுகிறது. தற்போதைய நிலவரப்படி, AICPI-IW புள்ளிவிவரங்கள் அக்டோபர் 2024 வரை வெளியிடப்பட்டுள்ளன. 

ஜூலை முதலான ஏஐசிபிஐ எண்களை பற்றி இங்கே காணலாம். ஜூலை 2024: குறியீட்டு எண் 142.7 ஆக இருந்தது. ஆகஸ்ட் 2024: சிறிது குறைந்து 142.6 ஆனது. டிஏ விகிதம் 53.95% ஆனது. செப்டம்பர் 2024: 143.3 ஆக அதிகரிப்பு DA விகிதத்தை 54.49% ஆக உயர்த்தியது. அக்டோபர் 2024: புள்ளிகள் உயர்ந்து 144.5 ஆயின. டிஏ 55.05% -ஐ எட்டியது. நவம்பர் மற்றும் டிசம்பர் 2024க்கான புள்ளிவிவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. டிசம்பரில் குறியீட்டு எண் 145.3ஐ எட்டினால், டிஏ 56.18% ஆக உயரலாம். இதன் அடிப்படையில் ஜனவரி 2025 இல் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) 3% அதிகரிக்கும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு ஊழியர்கள் ஜனவரி 2025 இல் குறிப்பிடத்தக்க டிஏ உயர்வு இருக்கும் என நம்புகிறார்கள், குறிப்பாக ஜூலை 2024 இல் 3% அதிகரிப்புக்குப் பிறகு. வரவிருக்கும் டிஏ உயர்வு 1 கோடிக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அகவிலைப்படி அதிகரிப்பு பணவீக்கத்தை சமாளிக்க ஊழியர்களுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் செலவழிப்பு வருமானத்தையும் அதிகரிக்கிறது. மறைமுகமாக இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கிறது. ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படி அதிகரிப்பு பெரும்பாலும் ஹோலி பண்டிகையின் போது அறிவிக்கப்படுகின்றது. 

வழக்கமாக, மறுசீரமைப்பு காலம் தொடங்கிய சில மாதங்களுக்குப் பிறகு அரசாங்கம் டிஏ உயர்வுகளை அறிவிக்கிறது. ஜனவரி மாத டிஏ உயர்வு அறிவிப்பு பெரும்பாலும் மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படுகின்றது. ஜூலை மாத டிஏ உயர்வு அறிவிப்பு பெரும்பாலும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் அறிவிக்கப்படுகின்றது. 

இந்த முறையும் இந்த அறிவிப்பு மார்ச் 2025 -இல் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மார்ச் முதல் திருத்தப்பட்ட டிஏவுடன் சேர்த்து ஜனவரி மற்றும் பிப்ரவரி 2025க்கான நிலுவைத் தொகையையும் ஊழியர்கள் எதிர்பார்க்கலாம்.

AICPI-IW இன்டெக்ஸ் அதன் மேல்நோக்கிய போக்கைத் தொடர்ந்தால், டிஏ எவ்வளவு உயரும்? நவம்பர் 2024: குறியீடு 145ஐ எட்டினால், டிஏ 55.59% ஆக உயரலாம். டிசம்பர் 2024: குறியீடு 145.3 க்கு மேலும் அதிகரித்தால், டிஏ 56.18% ஆக உயரும். இது எதிர்பார்க்கப்படும் 3% உயர்வை ஆதரிக்கும்.

அகவிலைப்படி அதிகரிப்பு உயரும் வாழ்க்கைச் செலவுகளின் தாக்கத்தைக் குறைத்து விலைவாசியை சமாளிக்க ஊழியர்களுக்குப் பலனளிக்கிறது. இந்த உயர்வு அவர்களின் வாங்கும் திறன் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது

சம்பள உயர்வு: ஊழியர்களின் அடிப்படை ஊதியம் (Basic Salary) ரூ.18,000 ஆகவும், அகவிலைப்படி 56% ஆகவும் இருந்தால், கணக்கீடு இப்படி இருக்கும்: ஜனவரி 2025 முதலான டிஏ: ரூ.18,000 x 56% = ரூ.10,080/மாதம் / ஜூலை 2024 வரையிலான டிஏ: ரூ.18,000 x 53% = ரூ.9,540/மாதம். 3% அதிகரிப்புக்குப் பிறகு சம்பளத்தில் காணப்படக்கூடிய மாற்றம் - மாதத்திற்கு ரூ.540. அகவிலைப்படியுடன் சேர்த்து ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணமும் அதிகரிக்கப்படும் என்பதால், ஓய்வூதியதாரர்களுக்கும் பெரிய அளவிலான ஓய்வூதிய உயர்வு இருக்கும்.

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link