மத்திய ஊழியர்களுக்கு அடித்த மெகா பரிசு, ஜூலையில் அகவிலைப்படி உயர்வு: புதிய அப்டேட்
மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை உயர்த்தி வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி என்பது வழங்கப்பட வேண்டும். ஆனால் ஒவ்வொரு முறையும் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு ஜனவரி, ஜூலை என முன்தேதியிட்டு வழங்கம்.
அகவிலைப்படி என்பது அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் 12 மாத சராசரி சதவீதத்தின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும். இந்த அகவிலைப்படி என்பது மக்கள் மீதான பணவீக்கத்தின் தாக்கத்தைத் தணிக்க, அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தின் ஒரு பகுதியாக அலவன்ஸ் ஆக வழங்கப்படும் தொகையாகும்.
மத்திய அரசு ஊழியர்கள் 50% அகவிலைப்படியை பெறுகிறார்கள். இது ஜனவரி 2024 முதல் நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில், ஜூலை மாதம் அகவிலைப்படி 4 - 5 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மத்திய அரசுப் பணியாளர்கள் சம்பளம் உயரப் போகிறது.
ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு, ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் முடிவு செய்து அறிவிக்கப்படும்.
ஜூலை மாதத அகவிலைப்படி உயர்வு (DA Hike) பற்றி ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. செப்டம்பர் மாதத்தில் இருந்து இது வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
7வது ஊதியக்குழுவின் படி, DA 50% ஆனதும் அவை பூஜ்ஜியமாக்கப்பட்டு, அகவிலைப்படி தொகை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படும். எனவே, அகவிலைப்படி 50% க்கு மேல் செல்லும்போதுதான் அது பூஜ்ஜியம் ஆக்கப்படும். எனினும் இது அடுத்த திருத்தத்தின் போது இது நடக்கலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது ஊதிய உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.