மத்திய அரசின் சர்ப்ரைஸ்: தேர்தலுக்கு முன் ஊழியர்களுக்கு 3 முக்கிய அறிவிப்புகள்

Sat, 24 Feb 2024-4:24 pm,

மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடிய விரைவில் பல முக்கிய செய்திகள் கிடைக்க உள்ளன. மக்களவை தேர்தலுக்கு (Lok Sabha Election) முன்னதாக மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த அறிவிப்புகளை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சமீபத்தில் வெளியான டிசம்பர் மாத ஏசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில் ஜனவரி 2024 முதலான அகவிலைப்படி அதிகரிப்பு நான்கு சதவீதம் இருக்கும் என்பது தெளிவாகியுள்ளது. அகவிலைப்படி 4% அதிகரித்தால் மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 50% ஆக உயரம்.

டி ஏ ஹைக் பற்றிய அறிவிப்பு மார்ச் மாதம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றி அறிவிப்பு மார்ச் மாதத்தில் ஹோலி பண்டிகையை ஒட்டி வருவது வழக்கம்.

ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் அனைத்திந்திய CPI-IW தரவின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலை குறியீடு 12 மாத காலத்திற்கு சராசரியாக 392.83 ஆக இருந்தது. இதன்படி அடிப்படை ஊதியத்தில் மொத்த அகவிலைப்படி 50.26 சதவீதமாக கணக்கிடப்படுகிறது. தசம எண்களை விலக்கிவிட்டு பார்த்தால் அகவிலைப்படி 50% ஆக இருக்கும்.

இதற்கு முன்னதாக ஜூலை 2023 -இல் அகவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரிக்கப்பட்டது. தற்போது மீண்டும் இதில் நான்கு சதவீதம் அதிகரிப்பிருந்தால் மொத்த டிஏ 50 சதவீதத்தை எட்டும். சுமார் 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் இதனால் பயன் அடைவார்கள்.

அகவிலைப்படியை தொடர்ந்து ஃபிட்மெண்ட் ஃபாக்டரும் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக உள்ளது. இதை 3.00 ஆக அதிகரிக்க வேண்டும் என உழியர் சங்கங்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றன.

அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டியவுடன் HRA -விலும் அதிகரிப்பு இருக்கும். ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரைகளின் படி X,Y, மற்றும் Z பிரிவு நகரங்களில் தற்போது 27, 18 மற்றும் 9 சதவிகிதமாக உள்ள HRA 30, 20 மற்றும் 10 சதவிகிதமாக அதிகரிக்கும். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link