உங்களை ஸ்மார்ட் ஆக யோசிக்க வைக்கும் 8 புத்தகங்கள்! கண்டிப்பா படிங்க..
Thinking, Fast and Slow:
இந்த புத்தகம் இரண்டு சிந்தனை அமைப்புகளை ஆராய்வதாக இருக்கிறது. இது, மனது எப்படி செயல்பட வேண்டும், மூளை எப்படி யோசிக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது. இதனை டேனியல் கானேமென் எழுதியிருக்கிறார்.
The Power Of Habit:
தி பவர் ஆஃப் ஹேபிட் புத்தகத்தை, சார்லஸ் டூஹிக் எழுதியிருக்கிறார். இந்த புத்தகம், நமது எண்ணங்கள் எப்படி செயல்களாக மாற வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்கிறது.
The Innovators Dilemma :
தி இன்னொவேட்டர்ஸ் டைலமா புத்தகத்தை, க்லேட்டன் எம்.கிரிச்டென்சன் எழுதியிருக்கிறார். இந்த புத்தகம், ஒருவர் எப்போதும் எப்படி புதிதாக யோசிக்க வேண்டும், உலகிற்கு ஏற்றவாறு எப்படி தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்கிறது.
The Art Of Thinking Clearly :
தி ஆர்ட் ஆஃப் திங்கிங் க்ளியர்லி புத்தகத்தை, ரால்ஃப் டோபெலி எழுதியிருக்கிறார். இந்த புத்தகம், நாம் எடுக்கும் முடிவுகள் எப்படி தெளிவானதாக இருக்க வேண்டும் என்பதை கற்பிக்கிறது.
Super Forecasting :
சூப்பர் ஃபோர்கேஸ்டிங் புத்தகத்தை, வாரென் பெர்கர் எழுதியிருக்கிறார். எந்த நேரத்தில், எந்த கேள்வியை கேட்டால் நமக்கு சரியான பதில் கிடைக்கும் என்பதை இந்த புத்தகம் எடுத்துக்காட்டுகிறது.
Range:
ரேஞ்ச், புத்தகத்தை டேவிட் எப்ஸ்டின் எழுதியிருக்கிறார். இந்த புத்தகம், ஒரு பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்பது குறித்தும், புதுமையான சிந்தனைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பது குறித்தும் சொல்லித்தருகிறது.
மைண்ட் செட்:
இந்த புத்தகத்தை, கேரோல் எச்.ட்வெக் எழுதியிருக்கிறார். இந்த புத்தகம், ஒருவரின் மனநிலையை வளர்க்கவும், பெரிய வெற்றியை தொட எப்படியெல்லாம் யோசிக்க வேண்டும் என்பது குறித்தும் கற்றுக்கொடுக்கிறது.
A More Beautiful Question:
அ மோர் பியூட்டிஃபுள் க்வஸ்டின் என்ற புத்தகத்தை வாரென் பெர்கர் எழுதியிருக்கிறார். இந்த புத்தகம், எப்படி நமது படைப்பாற்றலை அதிகரிக்க வேண்டும் என்பது குறித்தும், புதுமையான சிந்தனைகளை எப்படி வளர்ப்பது என்பது குறித்தும் கற்றுக்கொடுக்கும்.