காதலர்களுக்குள் இருக்கவே கூடாத 8 கெட்ட விஷயங்கள்!!
சண்டையை தவிர்ப்பது:
சண்டை வந்தால், அதை அப்படியே கண்டுகொள்ளாமல் இருக்க கூடாது. அதை தவிர்த்து விட்டு செல்வதால், அத் உ வருங்காலத்தில் பெரிதாக உருவெடுக்க வாய்ப்புள்ளது.
பேசுவதை தவிர்ப்பது: கணவன் மனைவி அல்லது காதலர்களுக்குள் சண்டை வரும் போது இருவரும் அது குறித்து பேசி, அதை முடிக்க வேண்டும். அதற்கு பதிலாக பேசாமல் தவிர்த்து வந்தால் கண்டிப்பாக அதுவும் ஒரு நாள் பெரிதாக விஸ்வரூபம் எடுக்கும்.
ஆதரவு தெரிவிக்காமல் இருப்பது:
தம்பதிகள் இருவருமே தொழில் ரீதியாக அல்லது தனிப்பட்ட ரீதியாக வளரும் போது ஒருவரை ஒருவர் உயர்த்த ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
நம்பிக்கை இல்லாமல் இருப்பது: ஒரு உறவு வளர அதற்கு அடிப்படையாக தேவைப்படுவது, நம்பிக்கை. இந்த நம்பிக்கையை இருவரும் காப்பாற்ற வேண்டும். நம்பகத்தன்மையை கெடுத்துக்கொள்ளும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது.
பொறாமை: பொறாமை, ஒரு அளவை மிஞ்சினால் அது டாக்ஸிக் ஆக மாறி விடும். எனவே இது குறித்த புரிதலும் இருவருக்குள்ளும் இருக்க வேண்டும்.
மரியாதையற்ற தன்மை:
இருவரும் தம்பதிகள் என்றாலும், இருவருமே இருவர் மீதும் தனிப்பட்ட ரீதியாக மரியாதை வைத்திருக்க வேண்டும். மரியாதை இல்லாமல் நடந்து கொள்ள கூடாது.
நேர்மையின்மை:
வாழ்வில் அனைவரையும், அனைத்து இடங்களிலும் நேர்மையுடன் அணுக வேண்டும். அதையே உங்கள் ரிலேஷன்ஷிப்பிலும் பின்பற்ற வேண்டும்.
கட்டுப்படுத்தும் நோக்கம்:
நீங்கள் இருவருமே தனித்தனி மனிதர்கள். இருவரும் ஒவ்வொருவர் நடத்தையை கண்காணிக்க அல்லது கட்டுப்படுத்த முயற்சி செய்யக்கூடாது.