அம்மாடி... 92% ஊதிய உயர்வு கிடைக்குமா!! மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக்குழு, லேட்டஸ்ட் அப்டேட்

Fri, 25 Oct 2024-8:54 am,

சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைபப்டி (Dearness Allowance) அதிகரிப்பு குறித்த நல்ல செய்தி கிடைத்தது. ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி 3% அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் அடுத்ததாக, 8வது ஊதியக்குழு பற்றிய நல்ல செய்திக்காக காத்திருக்கிறார்கள்.

 

வழக்கமாக, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. 7வது ஊதியக் குழு (7th Pay commission) 2014 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2016ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. அந்த வழியில், அடுத்த ஊதியக்குழுவான 8வது ஊதியக் குழு 2026 -இல் அமைக்கப்பட வேண்டும். அரசு விரைவில் இதற்கான முடிவை எடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு மத்திய ஊழியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

 

8வது ஊதியக் குழு, அடுத்த ஆண்டு தொடக்கத்தில், 2025 மத்திய பட்ஜெட்டின் போது அறிவிக்கப்படலாம் என உறுதியாக நம்பப்படுகின்றது. பட்ஜெட் புதிய ஊதியக்குழுவின் அறிவிப்புக்கான சரியான நேரமாக இருக்கும் என தொழிற்சங்கத் தலைவர் குறிப்பிட்டார். அதன் பின் அதற்கான பணிகள் தொடங்கினால், 2026 தொடக்கத்தில் 8வது ஊதியக்குழுவை அமலுக்கு கொண்டு வர முடியும்.

8வது ஊதியக் குழுவில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் (Pensioners) சம்பளம் மற்றும் ஓய்வூதியம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கம் மற்றும் பிற பொருளாதார காரணிகளை கருத்தில் கொண்டு சம்பள உயர்வு தீர்மானிக்கப்படுகிறது. புதிய ஊதியக்குழுவில் ஊதிய அமைப்பில் மாற்றம் செய்யப்படும். அடிப்படை சம்பளம், கொடிப்பனவுகள் (Allowances) என அனைத்திலும் திருத்தம் செய்யப்படும்.

 

8வது ஊதியக்குழுவில் முக்கிய மாற்றம் ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் இருக்கும். ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அடிப்படை ஊதியத்தை நிரணயிக்கும் ஒரு பெருக்கல் காரணியாகும். ஊழியர்களின் ஊதிய கட்டமைப்பில் இந்த எண் ஒரு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகின்றது. 

குறைந்தபட்ச சம்பளம்: 8வது ஊதியக்குழுவில் மத்திய அரசு ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 1.92 ஆக நிர்ணயிக்கக்கூடும் என நம்பப்படுகின்றது. எனினும், ஊழியர் சங்கங்கள் இதை 3.68 ஆக அதிகரிக்க வேண்டும் என கூறி வருகின்றன. 7வது ஊதியக்குழு அமைக்கப்பட்ட போதே ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 3.68 ஆக கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது.  எனினும், அப்போது அரசாங்கம் இறுதியில் ஃபிட்மென்ட் ஃபாக்டரை 2.57 ஆகவே நிர்ணயித்தது.

8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக நிர்ணயிக்கப்பட்டு அது அமல்படுத்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 -இல் இருந்து சுமார் ரூ.34,560 ஆக உயரக்கூயடும். அதாவது 92% உயர்வாக இருக்கும்.

ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்திலும் நல்ல ஏற்றம் இருக்கும். ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 -இலிருந்து ரூ.17,280 ஆக உயரலாம். பணவீக்கம், விலைவாசி மற்றும் பிற பொருளாதார காரணிகளால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இது மிகப்பெரிய நிவாரணத்தை அளிக்கும்.

கூட்டு ஆலோசனைக் கூட்டம் (Joint Consultative Machinery) நவம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக ஊடக அரிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த மன்றம் அரசு மற்றும் ஊழியர்களுக்கு இடையே உள்ள பிரச்சனைகளை தீர்க்க உதவும் ஒரு அமைப்பாக செயல்படுகிறது. JCM தேசிய கவுன்சில் மத்திய அமைச்சரவை செயலாளரால் வழிநடத்தப்படுகிறது. இதில் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் சங்கங்கள் மற்றும் சேவை சங்கங்களின் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கூட்டத்தில் 8வது ஊதியக்குழு குறித்த முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

ஊதிய உயர்வு: 8வது ஊதியக்குழு அமைக்கப்பட்டவுடன், அந்த குழு  பல்வேறு பொருளாதார நிலைமைகளை ஆய்வு செய்து அதன் படி கணக்கீடுகளை தயார் செய்து தனது அறிக்கையை சமர்ப்பிக்கும். இதற்கு முந்தை ஊதியக்குழுக்கள் இதற்கு கணிசமான நேரத்தை எடுத்துள்ளன. அதன் பிறகு அரசு அதை ஆய்வு செய்து தனது ஒப்புதலை அளிக்கும்.

 

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது. 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link