அம்மாடி, இவ்வளவு சம்பள உயர்வா!! 8வது ஊதியக்குழு...... மத்திய அரசு ஊழியர்களுக்கு எப்போது நல்ல செய்தி

Thu, 07 Nov 2024-9:08 am,

இந்திய அரசு சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் 7வது ஊதியக் குழுவை அமல்படுத்தியது. இதன் பலன்கள் அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் கிடைத்து வருகின்றது. பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. தற்போது எட்டாவது ஊதியக் குழு அமைக்கப்படும் என அனைவரும் காத்திருக்கின்றனர். 8வது ஊதியக் குழு தொடர்பான அனைத்து முக்கிய தகவல்களையும் இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவில் மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக ஊதியக் குழுக்கள் அமைக்கப்பட்டுகின்றன. இந்த செயல்முறையின் கீழ், சம்பளம் மற்றும் ஓய்வூதிய அதிகரிப்பு தவிர, பணவீக்கத்தின் விளைவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஊதியக் குழுவின் நோக்கம் ஊழியர்களின் வாங்கும் திறனைப் பராமரிப்பதும், பணவீக்கத்திலிருந்து அவர்களுக்கு நிவாரணம் அளிப்பதும் ஆகும்.

 

8வது ஊதியக்குழுவின் அதிகாரப்பூர்வ தேதியை இதுவரை இந்திய அரசு அறிவிக்கவில்லை. 2026 ஆம் ஆண்டிலேயே இது அமலுக்கு வரும் என்றும் இதற்கான அறிவிப்பு பட்ஜெட் 2025 -இல் (Budget 2025) வரும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். எனினும், அரசு முறையான அறிவிப்பை வெளியிடும் வரை ஊழியர்கள் காத்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு ஊதியக் குழுவின் உருவாக்கமும் ஊழியர்களுக்கு சில நன்மைகளை வழங்குகிறது. இது செயல்படுத்தப்பட்ட பிறகு, ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் நிச்சயமாக அதிகரிப்பு ஏற்படும். இது நிதி ரீதியாக அவர்களது எதிர்காலத்தை பலப்படுத்துகிறது. இது தவிர, பணவீக்கத்தின் விளைவுகளிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

 

ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத் தொகையானது ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. ஏழாவது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக இருந்தது. எட்டாவது ஊதியக் குழுவில் அது 1.92 ஆக அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால், ஊழியர்களின் சம்பளமும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியமும் அதிகரிக்கும்.

 

7வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆனதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் மாதம் ஒன்றுக்கு ரூ.7,000 -இலிருந்து ரூ.18,000 ஆக உயர்ந்தது. ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3,500 -இல் இருந்து ரூ.9,000 ஆக உயர்ந்தது.

அடிப்படை சம்பளம்: 8வது ஊதியக் குழு அமலுக்குப் பிறகு, அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச சம்பளத்தில் பெரிய உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. இதில் குறைந்தபட்ச ஊதியம் (Minimum Salary) ரூ.18,000 -இலிருந்து ரூ.34,560 ஆக உயரக்கூடும். இது சுமார் 52% அதிகரிக்கும். உயர் பதவிகளில் பணிபுரியும் ஊழியர்களின் அதிகபட்ச சம்பளம் மாதத்திற்கு ரூ.4,80,000 ஆக அதிகரிக்கலாம. இது தற்போதைய ரூ.2.5 லட்சத்தை விட 92% அதிகமாகும்.

 

8வது ஊதியக்குழு அமலாக்கத்தால் ஓய்வூதியதாரர்களும் (Pensioners) பயன்பெற வாய்ப்புள்ளது. தற்போது குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 ஆக உள்ளது. 8வது ஊதியக்குழு அமலுக்கு பிறகு இது ரூ.17,280 ஆக அதிகரிக்கலாம். அதேபோல், அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.1,25,000 -இலிருந்து ரூ.2,40,000 ஆக அதிகரிக்கலாம். இது ஓய்வூதியதாரர்களின் நிதி நிலைமையை மேம்படுத்தும்.

 

8வது ஊதியக் குழுவை அமல்படுத்துவது இந்தியப் பொருளாதாரத்திலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும் போது, ​​அவர்களின் வாங்கும் திறனும் அதிகரிக்கும், இது சந்தையில் தேவையை அதிகரிக்கும். இது சந்தைக்கு புதிய ஆற்றலை வழங்குவது மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்திற்கும் உத்வேகம் அளிக்கும்.

 

சமீபத்திய புதுப்பிப்புகளின்படி, நவம்பரில் கூட்டு ஆலோசனை அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் 8வது ஊதியக் குழு குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. ஊழியர்களின் சேவை நிலைமைகள் குறித்து பரிசீலிக்கும் நோக்கத்தில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டம் செயலாளர் தலைமையில் நடைபெறும். இந்தக் கூட்டத்தில், ஊழியர் சங்கங்களின் ஊதியக் கமிஷன் கோரிக்கை குறித்து விவாதிக்கப்படும்.

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link