8வது ஊதியக்குழுவில் அட்டகாசமான ஊதிய உயர்வு: எவ்வளவு? எப்போது?... மத்திய அரசு ஊழியர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட்
நீங்கள் மத்திய அரசு ஊழியரா? உங்கள் வீட்டில் யாரேனும் மத்திய அரசு ஊழியர்கள் இருக்கிறார்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். 8வது ஊதியக் குழுவுக்காக காத்திருக்கும் ஊழியர்ககுக்கு சில முக்கியமான புதுப்பித்தல்கள் கிடைத்துள்ளன. விரைவில் 8வது ஊதியக்குழு அமைப்பது குறித்த விவாதம் தீவிரமடைய உள்ளது.
மத்திய ஊழியர்களின் பணி நிலைமைகள் குறித்து ஆலோசிக்க உருவாக்கப்பட்ட JCM எனப்படும் கூட்டு ஆலோசனை அமைப்பின் (Joint Consultative Machinery) கூட்டம் அடுத்த மாதம், அதாவது நவம்பரில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் 8வது ஊதியக்குழு அமைப்பது குறித்த முக்கிய ஆலோசனைகள் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் நடைபெற உள்ள கூட்டத்தில் 8வது ஊதியக்குழு தொடர்பாக சில முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்படக்கூடும் என அகில இந்திய ரயில்வே ஃபெடரேஷன் தலைவரும், ஜேசிஎம் தேசிய கவுன்சிலின் செயலாளருமான ஷிவ் கோபால் மிஸ்ரா (Shiv Gopal Mishra) தெரிவித்துள்ளார். ஊழியர் அமைப்புகளில் உள்ளவர்கள் இந்த பிரச்சினையை எழுப்புவார்கள் என கூறப்படுகின்றது.
8வது ஊதியக் குழுவை விரைவில் அமைக்கக் கோரி, ஊழியர் அமைப்புகள் ஏற்கனவே அரசாங்கத்திடம் இரண்டு குறிப்பாணைகளை சமர்ப்பித்துள்ளதாக ஷிவ் கோபால் மிஸ்ரா கூறியுள்ளார். இதற்கான நடவடிக்கையை அரசு விரைவில் எடுக்கும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
வழக்கமாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக்குழுக்கள் அமைக்கப்படுகின்டன. 2014 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தன. அந்த நேரத்தில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் சுமார் 23% அதிகரித்தது. 2026 ஆம் ஆண்டு 7வது ஊதியகுழு அமலுக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடையும். எனினும், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழுக்களை அமைக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம், ஓய்வூதியம் கொடுப்பனவுகள் மற்றும் பிற வசதிகளை மதிப்பாய்வு செய்தல், மேம்படுத்துதல் மற்றும் அவற்றில் மாற்றங்களை பரிந்துரை செய்வதே சம்பள கமிஷனின் முக்கிய பணியாகும். 1946ல் முதல் ஊதியக்குழு அமைக்கப்பட்டு இதுவரை 7 ஊதியக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஐஆர்டிஎஸ்ஏ, ஊதிய மேட்ரிக்ஸை அவ்வப்போது மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டாம் என்றும் 7வது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளதாக கூறியுள்ளது. 2016ஆம் ஆண்டு 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டதில் இருந்து, அரசு செயல்பாடு, பொருளாதாரம் மற்றும் சேவைகளுக்கான தேவை ஆகியவற்றில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆகையால், மாறிவரும் இந்த சூழ்நிலைக்கு ஏற்ப புதிய ஊதியக்குழு பரிந்துரைகளை வழங்க வேண்டும் என அந்த அமைப்பு தனது கடிதத்தில் கூறியுள்ளது.
தற்போது ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை நிர்ணயிக்கும் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக உள்ளது. இதை 3.68 ஆக மாற்ற வேண்டும் என கோரிக்கைகள் உள்ளன. எனினும் அரசு இதை 1.92 ஆக மாற்றும் என கூறப்படுகின்றது.
ஊதிய உயர்வு: 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக நிர்ணயிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் (Basic Salary) ரூ.18,000 -இல் இருந்து சுமார் ரூ.34,560 ஆக உயரக்கூடும். அதாவது ஊதியம் 92% அதிகரிக்கும்.
மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமின்றி ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்திலும் நல்ல ஏற்றம் இருக்கும். ஓய்வு பெற்றவர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியம் தற்போது ரூ.9,000 ஆக உள்ளது. இது ரூ.17,280 ஆக உயரக்கூடும். பணவீக்கம், விலைவாசி மற்றும் பிற பொருளாதார காரணிகளால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இது மிகப்பெரிய நிவாரணத்தை அளிக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.