8வது ஊதியக்குழு... அடிப்படை ஊதியம், ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம்: அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு வருமா?
மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 8வது ஊதியக் குழுவுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இது தொடர்பாக அரசு இன்னும் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால், இன்னும் சில நாட்களில் அந்த நல்ல செய்தி வரும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். இதற்கு சில வலுவான காரணங்களும் உள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
7வது ஊதியக் குழு 2016 ஜனவரி 1 முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதற்கான பணிகள் 2014 ஆண்டு துவங்கின. இதன் மூலம் சுமார் 1 கோடி பேர் பயனடைந்துள்ளனர். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷன் அமல்படுத்தப்படுவதால், தற்போது மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு 8வது ஊதியக் குழுவை 2026 ஜனவரி 1 முதல் அமல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊதியக்கமிஷன் அமலுக்கு வர குறைந்தது 1 1/2 - 2 ஆண்டுகள் ஆகும் என்பதால், 2024, அதாவது இந்த ஆண்டு இதற்கான அறிவிப்பு வந்தால்தான் 2026 -இல் இதை அமல்படுத்துவது சுலபமாக இருக்கும்.
8வது ஊதியக்குழுவில் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் (Pensioners) ஓய்வூதியம் (Pension) ஆகியவற்றில் பெரிய ஏற்றம் இருக்கும். இதன் காரணமாகத்தான் மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் இதற்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
இருப்பினும், 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் காலம் டிசம்பர் 31, 2025 அன்று முடிவடையும் என்று அதில் குறிப்பிடப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில், இன்னும் 10 ஆண்டுகளில் இம்முறை புதிய ஊதியக் குழு அமல்படுத்தப்படுமா, இல்லையா என்ற சந்தேகமும் உள்ளது. 8வது ஊதியக் குழு குறித்து அரசு இதுவரை எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்த கோரிக்கைகளை மத்திய அரசிடம் கடந்த ஓராண்டில் பலமுறை ஊழியர் சங்கங்கள் அளித்து விட்டனர். பட்ஜெட் முடிந்த பிறகு, நிதித்துறை செயலர் டி.வி.சோமநாதனிடம் இதுகுறித்து கேட்டபோது, இந்தப் பணிகளுக்கு இன்னும் போதுமான அவகாசம் உள்ளது என்று கூறினார்.
6வது ஊதியக் குழுவில் இருந்து 7வது ஊதியக் குழுவுக்கு மாறியபோது, ஊழியர் சங்கம் சம்பள திருத்தத்தில் ஃபிட்மென்ட் ஃபாக்டரை 3.68 ஆக வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால், அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை. ஃபிட்மென்ட் ஃபாக்டரை 2.57 ஆகவே தொடர்ப்பட்டது. ஃபிட்மென்ட் ஃபாக்டர் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.7000ல் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
இதுமட்டுமின்றி, குறைந்தபட்ச ஓய்வூதியமும் 3500 ரூபாயில் இருந்து 9000 ரூபாயாக உயர்ந்துள்ளது. பணிபுரியும் ஊழியர்களின் அதிகபட்ச சம்பளம் ரூ.2.50 லட்சமாகவும், அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.1.25 லட்சமாகவும் மாறியது.
8வது ஊதியக் குழு அமைக்கப்பட்டு, அதில் ஊழியர் சங்கங்களின் கோரிக்கை ஏற்கப்பட்டால், ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68 ஆக உயரக்கூடும். 2.57 ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 ஆக உள்ளது. இது 3.68 ஆனால், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.26,000 ஆக உயர்த்தப்படும். இதன் மூலம் 44% ஊதிய உயர்வு இருக்கும்.
ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68 ஆக அதிகரித்தால், ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ. 26,000 ஆக உயரும். தற்போது ஒரு ஊழியரின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 என்றால், அலவன்ஸ்கள் தவிர்த்து, ஃபிட்மென்ட் காரணியான 2.57-ன் அடிப்படையில் அவருக்கு ரூ.46,260 (18,000 X 2.57 = 46,260) கிடைக்கும். ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68 ஆக அதிகரித்தால் ஊதியம் ரூ 95,680 (26000X3.68 = 95,680) ஆக உயரும்.
8வது ஊதியக்குழு அமைக்கப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் மாற்றம் இருக்கும். இது தவிர ஊழியர்களின் அகவிலைப்படி (DA), வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA), போக்குவரத்து கொடுப்பனவு (TA) போன்ற பல்வேறு சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகளிலும் ஏற்றம் ஏற்படும் என்பதால் ஒட்டுமொத்தமாக அவர்களுக்கு பம்பர் ஊதிய உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.