Modi Govt | 8வது ஊதியக்குழு ஹேப்பி நியூஸ்! அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு

Sat, 12 Oct 2024-2:29 pm,

நீண்ட நாட்களாக மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் எட்டாவது ஊதிய குழுவுக்கான அறிவிப்பு எப்பொழுது வரும் எனக் காத்திருக்கிறார்கள். அதற்கான காரணத்தை பார்ப்போம்.

தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், பணவீக்கத்திற்கு ஏற்ப உயர்த்த எட்டாவது ஊதியக்குழு அமைக்கப்பட்டால், அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு 20% முதல் 35% வரை இருக்கலாம் எனத் தகவல்

எட்டாவது ஊதியக்குழு கொண்டு வந்தால், அரசு ஊழியர்களுக்கு மட்டுமில்லை, ஓய்வூதியதாரர்களுக்கும் நல்ல செய்தியாக இருக்கும். ஏனென்றால், அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியமும் அதிகரிக்கும்,. 

எட்டாவது ஊதியக்குழு அமைக்கப்பட்டால் அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு 20 முதல் 35% வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் ஒரு கோடிக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பலன் அடைவார்கள்.

அரசு ஊழியர்களுக்கான சம்பளக் கட்டமைப்பை மதிப்பாய்வு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வது ஊதியக்குழுவின் பணியாகும். பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப நியாயமான சம்பளத்தை வழங்குவதை ஊதியக்குழு உறுதி செய்கின்றன. அதாவது பணவீக்கத்தைப் பொறுத்து அனைத்து அரசு ஊழியர்களின் சம்பளத்தை மறுபரிசீலனை செய்வது ஊதியக் குழுவின் பொறுப்பாகும்.

1946 ஆம் ஆண்டில் மத்திய அரசால் முதல் ஊதியக்குழு தொடங்கப்பட்டது. தற்போது 7வது ஊதிய குழு அமலில் உள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்திற்கு ஏற்ப 8வது ஊதிய குழுவை கொண்டுவர வேண்டும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

எட்டாவது ஊதியக்குழு 2026 ஆம் ஆண்டு அமலுக்கு வரலாம் எனத் தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் இது குறித்து மத்திய அரசிடமிருந்து அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் வரவில்லை.

நீண்ட நாட்களாக மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கிறார்கள். மறுபுறம் ஓய்வூதியதாரர்களும் அகவிலை நிவாரணம் அதிகரிப்புக்காக காத்திருக்கிறார்கள். 

தீபாவளி பண்டிகையின் பரிசாக அகவிலைப்படி உயர்வு மற்றும் அகவிலை நிவாரணம் குறித்து அறிவிப்பை மத்திய அரசு வெளியிடவுள்ளதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. இதன்மூலம் விரைவில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு குறித்து மகிழ்ச்சியான செய்தி விரைவில் வரப்போகிறது.

\இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link