8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் பரிசு.... மொத்த சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?
)
நீங்கள் ஒரு மத்திய அரசு ஊழியரா? உங்கள் வீட்டில் யாரேனும் மத்திய அரசு பணிகளில் உள்ளார்களா? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். உங்களுக்கு கூடிய விரைவில் ஒரு மிகப்பெரிய நல்ல செய்தி வரவுள்ளது. அதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
)
மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய கணக்கீடுகள் ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் நடக்கின்றன. 7வது ஊதியக் குழுவின் (7th Pay Commission) பரிந்துரைகளின் அடிப்படையில் தற்போது சம்பளம் வழங்கப்படுகிறது. பொதுவாக பத்தாண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதியக்குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் அமலுக்கு வருகின்றன.
)
2014 ஆம் ஆண்டு ஏழாவது ஊதிய குழுவிற்கான அறிவிப்பு வெளிவந்தது. அதன் பரிந்துரைகள் 2016 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தன. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டில் அடுத்த ஊதிய குழுவிற்கான பரிந்துரைகள் அமலுக்கு வரவேண்டும். புதிய ஊதிய குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த குறைந்தது 1 1/2 முதல் 2 ஆண்டுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் இப்போதே இதற்கான பணிகளைத் தொடங்கினால்தான் 2026 -இல் அதை அமலுக்கு கொண்டு வர முடியும்.
மத்திய அரசாங்கம் புதிய ஊதிய குழுவிற்கான ஆயத்த பணிகளை தொடங்கி விட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் அரசாங்கத்தின் சார்பில் இன்னும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. ஜூலை 23ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதில் எட்டாவது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பு வரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜெசிஎம் செயலர் சிவகோபால் மிஷ்ரா 8வது ஊதியக்குழுவை வலியுறுத்தி அரசாங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். எட்டாவது ஊதியக்குழு அமலுக்கு வந்தால் 9 லட்சம் அரசு ஊழியர்களும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.
8வது ஊதியக் குழுவில் ஃபிட்மண்ட் ஃபேக்டர் அதிகரிக்கப்படுவதோடு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஃபிட்மெண்ட் ஃபேக்டரின் அடிப்படையில் தான் அவர்களின் பே மேட்ரிக்ஸ் உருவாக்கப்படுகின்றது. இது அதிகரிக்கப்பட்டால் ஊதியத்தில் நல்ல ஏற்றம் இருக்கும்.
7வது ஊதியக் குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 மடங்காக நிர்ணயிக்கப்பட்டது. இதன் காரணமாக அடிப்படை சம்பளம் 18,000 ஆக வைக்கப்பட்டது. எனினும் ஃபிட்மெண்ட் ஃபேக்டரை 3.68 மடங்காக அதிகரிக்க வேண்டும் என்று ஊழியர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு அப்போது அதை ஏற்கவில்லை. 2.57 ஃபிட்மண்ட் ஃபேக்டரிலேயே பே மேட்ரிக்ஸ் (Pay Matrix) தயாரிக்கப்பட்டது.
இப்போது எட்டாவது ஊதிய குழுவிலாவது ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3.68 ஆக அதிகரிக்கப்படும் என்று ஊழியர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இதன் தாக்கம் நேராக அடிப்படை ஊதியத்தில் இருப்பதால் இதை அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியமாக கருதப்படுகின்றது.
8வது எட்டாவது ஊதியக்குழு அமைக்கப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் மாற்றம் இருக்கும். இது தவிர ஊழியர்களின் அகவிலைப்படி (DA), வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA), போக்குவரத்து கொடுப்பனவு (TA) போன்ற பல்வேறு சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகளிலும் ஏற்றம் ஏற்படும் என்பதால் ஒட்டுமொத்த ஊதியத்தில் பம்பர் ஏற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.