8வது ஊதியக்குழு: 25%-35% ஊதிய உயர்வு, ஓய்வூதியத்திலும் மெகா ஏற்றம், குஷியில் ஊழியர்கள்
)
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தையும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தையும் திருத்துவதற்காக 8வது சம்பளக் குழுவை அமைக்க ஒப்புதல் அளித்தது. இது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நல்ல செய்தியாக வந்தது.
)
8வது ஊதியக்குழுவில் எதிர்பார்க்கப்படும் முக்கிய மாற்றங்கள் என்ன? மத்திய அரசு ஊழியர்களின் மாத சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? ஓய்வூதியத்தில் எவ்வளவு மாற்றம் இருக்கும்? இந்த விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
)
8வது ஊதியக்குழுவில் குறிப்பாக ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் முக்கிய மாற்றம் இருக்கும். ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில்தான் அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்படுகின்றது என்பதால், ஊதிய கட்டமைப்பில் இதற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது.
8வது ஊதியக் குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 முதல் 2.86 -க்குள் இருக்க வாய்ப்பிருப்பதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 2.86 ஃபிட்மென்ட் ஃபாக்டருக்கு ஒப்புதல் கிடைத்தால், அது மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் ஆகியவற்றை கணிசமாக உயர்த்தும்.
ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் மாதத்திற்கு ரூ.18,000 லிருந்து ரூ.51,480 ஆக உயரும்.
ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியமும் நல்ல ஏற்றத்தை காணும். ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியப் பலன்கள் சுமார் 30% அதிகரிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்பட்டால், குறைந்தபட்ச ஓய்வூதியம் தற்போதுள்ள ரூ.9,000 லிருந்து ரூ.25,740 ஆக அதிகரிக்கும்.
8வது சம்பளக் குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 இலிருந்து 2.86 ஆக அதிகரித்தால், ஊழியர்களின் கிராஜுவிட்டி தொகை ரூ.12.56 லட்சத்தை எட்டக்கூடும் என்று நம்பப்படுகிறது. இது பணி ஓய்வு காலத்தில் மிகப்பெரிய நிவாரணமாக அமையும்.
சம்பள உயர்வு: 8வது ஊதியக் குழு மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை 25% முதல் 35% வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய பொருளாதார நிலை, பணவீக்கம் மற்றும் விலைவாசி விகிதத்தின் அடிப்படையில் அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை மதிப்பிடுவதே 8வது ஊதியக் குழுவின் முக்கிய நோக்கமாகும்.
தற்போது அமலில் இருக்கும் 7வது ஊதியக்குழு 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. இதில் குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டது. அதிகபட்ச ஊதியம் ரூ.2,50,000/மாதமாகும். இதில் கிரேட் ஊதிய முறைக்கு பதிலாக, கொடுப்பனவுகள் மற்றும் பணி-வாழ்க்கை சமநிலையில் கவனம் செலுத்தப்பட்டு புதிய ஊதிய அமைப்பு பரிந்துரைக்கப்பட்டது.
7வது சம்பளக் கமிஷனின் காலம் 2026 இல் முடிவடையும். இதன் விளைவாக, 8வது ஊதியக்குழுவுக்கான உருவாக்கம் அவசியமாகிவிட்டது. இந்த குழுவின் பரிந்துரைகள் வெளிவந்தவுடன் அடிபப்டை ஊதியம், அலவன்சுகள், அகவிலைப்படி, ஓய்வூதியம் என அனைத்திலும் பெரிய அளவில் ஏற்றம் இருக்கும் என மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நம்புகிறார்கள்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் 8வது ஊதியக்குழுவின் மூலம் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.