8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய பிட்மெண்ட் காரணி இதுதான்!
கூட்டு ஆலோசனை இயந்திரங்கள் தேசிய கவுன்சில் செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா, 8வது ஊதிய கமிஷனில் பிட்மெண்ட் காரணி குறைந்தபட்சம் 2.86 ஆக இருக்க வேண்டும் என்று அரசிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.
7வது ஊதியக் குழு விரைவில் முடிவடைய உள்ள நிலையில், 8வது ஊதியக் குழு தொடர்பான பேச்சுக்கள் ஊழியர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இருப்பினும் மத்திய அரசு இதில் மவுனம் காத்து வருகிறது.
அரசிடம் இருந்து எப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திக்கொண்டுள்ளனர். 2025-26 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 8 வது ஊதியக் குழு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியகாரர்கள் எவ்வளவு பிட்மெண்ட் காரணியை அரசு நிர்ணயிக்கும் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர்.
மத்திய அரசு பிட்மெண்ட் காரணியை 2.86 என்று நிர்ணயித்தால் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000ல் இருந்து 186% அதிகரித்து ரூ.51,480 ஆக இருக்கும்.
அதே போல குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000ல் இருந்து ரூ.25,740 ஆக மாறும். மேலும் அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) மற்றும் பிற சலுகைகள் மறுபரிசீலனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.