ரத்தன் டாடாவின் நம்பிக்கைக்குரிய தமிழ்நாட்டின் பிரியர் யார் தெரியுமா?
‘சந்திரா’ என அழைக்கப்படும் சந்திரசேகரன் இவர் தமிழ்நாட்டில் மோகனூர் கிராமத்தில் பிறந்தார்.விவசாயக் குடும்பத்தின் ஒருவராகப் பிறந்து தற்போது உலகளவில் பேசப்படும் ரத்தன் டாடாவின் நீண்ட நாள் நெருங்கிய நண்பரும் டாடாக் குடும்பத்தின் நபரானது எப்படி? சந்திரசேகரைப் பற்றி அறியாத சில சுவாரஸ்ய உண்மைகள்.
மோகனூர் கிராமத்தில் பெரிதாக வசதிகள் ஏதும் கிடையாது. சுற்றிலும் வயல்வெளி,காடு, மலை சூழ்ந்த இடம். ஆனால் அப்படி இருக்கும் இடத்திலிருந்து எப்படி ரத்தன் டாடாவிடம் பழக்கமானர். ஒரு சுவாரஸ்யமான சம்பவம் அவரது வாழ்க்கையை மாற்றியது.
சந்திரசேகரன் இவருக்கு சிறுவயதிலிருந்தே கணினி தொழில் நுட்பத்தில் ஆர்வம் மிகுதி, சிறுவதிலிருந்து தனது கனவை நோக்கி பயணம் செய்ய வேண்டும் எனத் தீரா காதல் கொண்டவர். அரசுப் பள்ளியில் படிப்பு, ஆனால் வாழ்க்கையோ வேறு. இதுதான் ஒருவர் உழைப்பிற்குக் கிடைக்கும் மிகப்பெரிய ஊதியம்.
கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் இளங்கலைப் படிப்பும், திருச்சிராப்பள்ளியில் உள்ள மண்டல பொறியியல் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் முடித்தார்.பிறகு டாடா நிறுவனத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்து அதில் அவரது திறமையைக் கண்டு மேலும் அவருக்குப் பதவி உயர் வழங்கி டாடா குழுமம் கௌரவப்படுத்தினர்.
1987யில் tcs நிறுவனத்தில் முதலில் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். மேலும் அவரின் உழைப்புக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டே இருந்தது. 2007யில் டாடா நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக (coo)ஆக நியமனம் ஆனார்.
2017யில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் உயர் பதவியை ஏற்றார்.அதன்பின் அவரதுக் கடின உழைப்பை இது ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தது. 46 வயதிலே டாடாவின் இளைய தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.இவரது தலைமையில் டாடாக் குழுமத்திற்கு அதிகமான இலாபம் பெறத் தொடங்கியது.
டாடா குடும்பத்தில் பிறக்காத முதல் நபரை உயர் பதிவில் வைத்திருப்பது இதுவே முதன் முதல், அதன் தொடக்கம் சந்திரசேகரனைச் சாரும்.சந்திரசேகரன் விவசாயக் குடும்பத்தில் பிறந்தாலும் இவரின் உழைப்பின் மூலதன பங்கு மிகவும் கடினம். அதற்கான பலன் தற்போது அவர் இந்தநிலையில் இருப்பதற்குக் காரணம்.
சந்திரசேகரன் கடின உழைப்பால் டாடா நிறுவனம் லாபம் ஈட்டியது.இவரது உழைப்புக்குக் கிடைத்த ஊதியத்தின் மதிப்பு 2019யில் ஆண்டுக்கு சுமார் ரூ.65 கோடி சம்பளம் வாங்கினார்.மேலும் 2021-22யில் டாடாகுழுமத்தின் தலைவராக ஆண்டுக்கு ரூ.109 கோடிப் பெற்றார்.தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டில் படித்துவிட்டு பின் ரத்தன் டாடாவிற்கு நெருக்கமான நண்பரும் டாடாவின் நம்பிக்கைகுரிய நபரும் இந்த உலகம் பெருமைப்படுத்த மறந்துவிடக்கூடாது.