Ajith Kumar: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்குமாரின் தற்போதைய போட்டோ!
![Ajith Kumar Ajith Kumar](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2024/03/13/376144-7.jpg?im=FitAndFill=(500,286))
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்குமார், சில நாட்களுக்கு முன்பு முழு உடல் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அவருக்கு மூளையில் கட்டி உள்ளதாகவும் இதற்காக 4 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
![Ajith Kumar Ajith Kumar](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2024/03/13/376143-6.jpg?im=FitAndFill=(500,286))
அஜித்குமார் குறித்து வெளியான தகவல்கள் எதுவுமே உண்மை இல்லை என்று அவரது செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்தார். அஜித்தின் காதுக்கு பின்னால் சிறிய கட்டி இருந்ததாகவும், அதை நீக்குவதற்காகதான் இந்த அறுவை சிகிச்சை நடைப்பெற்றதாகவும் அவர் கூறினார்.
![Ajith Kumar Ajith Kumar](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2024/03/13/376142-5.jpg?im=FitAndFill=(500,286))
அஜித், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து பிரபலங்களும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவரிடம் நலம் விசாரித்தனர்.
அஜித்குமார், அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அதன் பிறகு இவர் எப்படியிருக்கிறார் என்று ரசிகர்களுக்கு பெரிதாக தெரியாமல் இருந்தது.
இதுதான் ஷாலினி அஜித்குமார் வெளியிட்ட அஜித்தின் சமீபத்திய புகைப்படம். இது, தற்போது வைரலாகி வருகிறது.
அஜித்குமாரின் குடும்பத்தில் ஷாலினி மட்டும், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.
அவ்வப்போது தனது கணவர், குழந்தைகள் மற்றும் தங்கையுடன் எடுத்த புகைப்படங்களை ஷாலினி வெளியிட்டு வருகிறார்.