சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுக்கும் தனுஷ் மகன் யாத்ரா! எந்த படம் தெரியுமா?
நடிகர் தனுஷிற்கும் ஐஸ்வர்யாவிற்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் யாத்ரா, பார்ப்பதற்கு கொஞ்சம் ரஜினி போலவும் கொஞ்சம் தனுஷ் போலவும் இருப்பார்.
2022ஆம் ஆண்டு ஐஸ்வர்யாவும் தனுஷும் பிரிந்து விட்டனர். ஆனால், தங்களின் இரு குழந்தைகளையும் கோ-பேரண்டிங் முறையில் பார்த்துக்கொள்கின்றனர்.
தனுஷின் மகன்கள், அவர் நடித்த படங்கள் மட்டுமன்றி அவர்களின் தாய் இயக்கிய படங்களின் விழாக்களுக்கும் பட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர்.
தனுஷின் மகன் யாத்ரா, தற்போது சினிமாவிற்குள் நுழைய இருக்கிறார். அது என்ன படம் தெரியுமா?
யாத்ரா, முதன்முறையாக ஹீரோவாக நடிக்க போவதில்லை. ஒரு பாடலுக்கு லிரிக்ஸ் எழுதி அறிமுகமாகியிருக்கிறார்.
தனுஷ், ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கி இருக்கிறார். இதில் முழுக்க முழுக்க, இளைஞர்கள் நடிக்கின்றனர்.
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் முதல் சிங்கிளான ‘கோல்டன் ஸ்பேரோ’ வரும் 30ஆம் தேதி (நாளை) வெளியாகிறது. இதில், பிரியங்கா மோகன் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடுகிறார்.
‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் முதல் சிங்கிளான ‘கோல்டன் ஸ்பேரோ’ பாடலின் லிரிக்ஸை தனுஷின் மகன் யாத்ரா எழுதியிருக்கிறார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்த எஸ்.ஜே.சூர்யா, பாடலை பார்த்து இம்ப்ரஸ் ஆனதாகவும், கூடவே யாத்ராவை பாராட்டியும் எழுதியிருந்தார்.