Actor Dhanush: ஓஹோ.. இதுதான் மேட்டரா..! புஷ்வானமானது தனுஷ் போட்ட பிளான்
தனுஷ் இப்போது தயாரிக்கவிருக்கும் புதிய படத்துக்கு அவர் போட்ட கண்டிஷனால் தயாரிப்பாளர்கள் யாரும் படத்தை தயாரிக்க முன் வரவில்லையாம்.
அவரே படத்தை எழுதி, இயக்கி நடித்துக் கொடுப்பதற்கு 100 கோடி ரூபாய் கேட்கிறாராம். இதனை கேட்ட முன்னணி தயாரிப்பாளர்கள் ஆடிப்போய்விட்டனராம்.
தனுஷ் இது குறித்து கலைப்புலி தாணு, சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். ஆனால் யாரும் டீலுக்கு ஓகே சொல்லவில்லையாம்
40 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் தனுஷ், 100 கோடி ரூபாய்க்கு தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்திக் கொள்ள போட்ட பிளான் தான் இது.
சிவகார்த்திகயேன் மார்க்கெட் 100 கோடியை கடந்துவிட்டதால், சீனியரான தன் மார்க்கெட் அந்தளவுக்கு ரீச் ஆகாததால் இந்த புதிய முடிவை எடுத்திருக்கிறார். அதனாலேயே, மாரி செல்வராஜ் கூட்டணியின் தான் நடிக்கும் புதிய படத்தை தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்திலேயே தயாரிக்கிறாராம்.