நாக சைதன்யா சோபிதா திருமணம் : சமந்தா போட்ட பதிவு என்னத் தெரியுமா ?
தெலுங்கில் பிரபல நடிகர் நாகார்ஜூனாவின் மூத்த மகனான நாக சைதன்யாவுக்கு சில வருடங்கள் முன்பு தென்னிந்திய நடிகையான சமந்தாவுடன் திருமணம் நடந்தது.
நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் திருமண உறவு பாதியிலே முறிந்துவிட்டது. தற்போது சமந்தா ஸ்கிலாக வாழ்ந்து வருகிறார்.
திருமண உறவு முறிந்த சில நாட்களிலே சமந்தா அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா பாகம் ஒன்றில் ஓ சொல்றியா பாடலுக்கு நடனம் ஆடியது அந்த சமயத்தில் அதிகமான வைரலாகி வந்தது.
நாக சைதன்யா மற்றும் சோபிதா இருவருக்கும் திருமண நடைப்பெறயுள்ள நிலையில் சமந்தா இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி ஒன்று பதிவிட்டுள்ளார்.
சமந்தா “ FIGHT LIKE A GIRL" என்று குறிப்பிட்டு சிறிய குழந்தை பையனிடம் சண்டையிடும் வீடியோவை பதிவிட்டு மறைமுகமாகத் தனது ஆதங்கத்தைத் தெரிவித்ததாகப் பலரும் கூறுகின்றனர்.
பெண் போன்று சண்டை போடுவதாகக் குறிப்பிட்டு நாக சைதன்யாவுக்கு நச்சுனு நெத்தியடி அடித்ததாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.
நாக சைதன்யா மற்றும் சோபிதா இருவரின் திருமணம் குறித்துப் பேசிய நாகார்ஜூனா தற்போது தான் என் மகன் சந்தோஷம் மீண்டும் பார்க்கமுடிகிறது. இது எங்களுக்கு மிகுந்த மன மகிழ்ச்சியை அளிக்கிறது என்று தன் மூத்த மகன் நாக சைதன்யா குறித்துப் பேசினார்.
மெஹந்தி நிகழ்ச்சி முதல் ஹல்தி நிகழ்ச்சி வரை நாக சைதன்யா மற்றும் சோபிதா திருமணம் களைக்கட்டி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.