கைவசம் இத்தனை படங்களா.. கலக்கும் வில்லன் எஸ்.ஜே சூர்யா

Sun, 04 Aug 2024-7:34 pm,

இந்தியன் 2 படத்தில் சில காட்சிகளில் மட்டும் வந்தாலும் ரசிகர்களை கவரும் விதமாக நடித்து அப்ளாஸ் வாங்கிய எஸ்.ஜே.சூர்யா, இந்தியன் 3 படத்தில் மாஸ் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகும் சர்தார் 2 படத்தில் எஸ்.ஜே. சூர்யா ஒரு வில்லனாக நடிக்கிறார்.

 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் ஹீரோவாக நடிக்கும் குட் பேட் அக்லி படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் சமீபத்தில் தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

 

அடுத்த ஆண்டு மலையாளத்தில் விபின் தாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் பகத் பாசில் உடன் இணைந்து நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

 

தெலுங்கில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் ராம்சரணுக்கு வில்லனாக நடித்து வரும் அவர், சரிபோதா சனிவாரம் என்கிற படத்தில் நடிகர் நானிக்கு வில்லனாக நடிக்கிறார். 

 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் எல்ஐகே (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார்.

 

அருண் குமார் - சீயான் விக்ரம் கூட்டணியில் உருவாகும் வீர தீர சூரன் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் முக்கியமான வேடத்தில் நடித்துவருகிறார்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link