நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள புதிய திரைப்படம்! மார்ச் 1ம் தேதி ரிலீஸ்!

Wed, 21 Feb 2024-11:46 am,

ஸ்ரீகாந்த் -  பிரியங்கா திம்மேஷ் நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் "சத்தம் இன்றி முத்தம் தா" படம் மார்ச் 1ம் தேதி வெளியாக உள்ளது.  ராஜ் தேவ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

 

செலிபிரைட் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் கார்த்திகேயன்.S தயாரித்துள்ள படத்தில் ஹரிஷ் பேராடி மற்றும் பலர் நடித்துள்ளனர். திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களுக்கு இசையமைத்த ஜுபின் இசைக்கு பிரபல பாடலாசிரியர் விவேகா பாடல்களை எழுதியுள்ளார்.

 

இந்த படத்தின் இயக்குனர் ராஜ் தேவ் லாஸ் ஏஞ்சல்ஸ் உலகத் திரைப்பட விழாவில் பத்து விருதுகளுக்கு மேல் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு ஆனந்த விகடன் மற்றும் சாவி இதழ்களில் சிறுகதைகள் எழுதியுள்ளார். 

 

மேலும் அவர் அமெரிக்காவில் நடைபெற்ற திரைக்கதை போட்டியில் அனைத்து நாடுகளும் கலந்து கொண்ட நிலையில் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு கதைகளான ‘KISS DEATH மற்றும் A STRANGER IS WALKING BY’ஆகியவற்றிற்கு சொந்தக்காரர் ஆவார்.

 

அவை இரண்டும் அமெரிக்காவில் அச்சிடப்பட்டு வெளியானதோடு இணையத்தின் KINDLE லும்  பதிவேற்றப்பற்றுள்ளது. படம் பற்றி இயக்குனர் ராஜ் தேவ் பேசியதாவது, காதலும் சஸ்பென்ஸ் கூடிய ஒரு திரில்லர் ஆகும். இது எதிர்பாராத திருப்புமுனைகளுடன் பார்வையாளர்களை ஈர்க்கும் விதமாக புனையப்பட்டது என்று கூறியுள்ளார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link