வாழ்ந்தா சூர்யா கூட தான்! மனம் திறந்த ஜோதிகா...க்யூட் லவ் ஸ்டோரியை இங்க படிங்க..
ஸ்வாரஸ்யமான ஜோதிகா சூர்யா காதல் கதைகள்.ரசிகர்களுக்காக ரகசியத்தை சொன்ன ஜோதிகா.சூர்யாவிடம் பிடித்தது மரியாதை அதில்தான் நான் முதலில் கவர்ந்தேன் என்று ஜோதிகா சிரித்துக்கொண்டே ஜாலியாக பேசியுள்ளார்.
பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் ஜோதிகா முதலில் சூர்யாவிடம் அறிமுகமானர்.இப்படம் ஒரு காதல் நிறைந்த படம். இருவருக்கும் இடையில் ஒரு பாசமான அன்பு இருக்க வேண்டும். அதற்காக இருவரும் பழகிகொள்ளுங்கள், அப்போதுதான் படம் காதல் படமாக அமையும் என்று இயக்குநர் கூறியதை ஜோதிகா கூறினார்.
ஜோதிகாவின் அழகிலும் பேச்சிலும் சூர்யா முதல் படத்திலே காதலில் விழுந்துவிட்டதாக ஜோதிகா வெட்கப்பட்டுக் கூறினார்.
ஜோதிகா தனது திருமணத்திற்காக 4 ஆண்டுகள் காத்திருந்ததாகவும். இரு குடும்பமும் காதலுக்கு ஒப்புக்கொண்டுள்ளதால் உடனே திருமணம் செய்ய முடிவெடுத்ததனர். அப்போது 4 படங்களில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பணம் வாங்கிவிட்டேன். திருமணம் முடிவெடுத்ததால் மீண்டும் பணத்தை திரும்பிக் கொடுத்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
ஜோதிகா சூர்யாப் பற்றிக் கூறுகையில் அவர் அதிகமாக குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புவார். அதற்காக பட வேலையை முடித்துவிட்டு நேராக வீட்டில் குழந்தைகளைப் பார்க்க வருவார் என ஜோதிகா சூர்யாப் பற்றி கூறியிருந்தார்.
வாழ்ந்தா சூர்யா கூடதான் ஜோதிகா வெட்கப்பட்டு கூறினார்.சூர்யா குழந்தைகள் மீது அதிக பாசம் வைத்துள்ளார்.நான் ஒரு நாளும் குழந்தைகளை விட்டு இருந்ததில்லை - ஜோதிகா
சூர்யா ஜோதிகா பெரும்பாலும் ஜோடியாக நடித்தால் படம் பெரிய வெற்றியைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் காதல் ஜோடிகளுக்கு மிகவும் பிடிக்கும் என்று ஜோதிகா கூறியுள்ளார்.
ஜோதிகா 36 வயதினிலே படம் பெண்களுக்காக சிறப்பாக நடித்திருந்தார்,அது வெற்றிப் பெற்றதால் ஜோதிகா பெண்கள் முன்னேற்றம் குறித்து பல படங்களில் நடிக்கத் தொடங்கினார்.