2024 தேர்தலில் விஜய்யின் கட்சி போட்டியிடவில்லையா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!
விஜய்யின் அரசியல் கட்சி குறித்த செய்திகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் விஜய் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும், நேரடியாக 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை வைத்து தொடர்ந்து பல சமூக சேவைகளை செய்து வருகிறார். கடந்தாண்டு பிளஸ் டூவில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு நிதி உதவியை வழங்கினார். மேலும் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கினார்.
தமிழக மக்கள் இயக்கம் என்ற பெயரில் விஜய் கட்சியை பதிவு செய்துள்ளதாகவும், விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கடந்த ஒரு வார காலமாக சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டு வருகிறது.
இதனால் விஜய் ரசிகர்கள் இதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என ஆர்வமுடன் காத்துக் கொண்டுள்ளனர், சமீபத்தில் கட்சி நிர்வாகிகளை வீட்டில் சந்தித்த விஜய் இது குறித்து ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் இந்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடாததால் யாருக்கு தனது ஆதரவை வழங்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகமாக உள்ளது.