செம ஸ்டைலாக மாடர்ன் உடையில் விஜய் மனைவி சங்கீதா! சமீபத்திய வைரல் புகைப்படம்..

Sat, 21 Sep 2024-9:40 am,

நடிகர் விஜய், லண்டனை சேர்ந்த சங்கீதாவை 1999ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களது, பெரியோர்களால் பார்த்து செய்து வைக்கப்பட்ட திருமணம் ஆகும். 

சங்கீதா-விஜய்க்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா ஷாஷா என இரு பிள்ளைகள் இருக்கின்றனர். இதில், சஞ்சய்க்கு 24 வயதாகிறது. அவர் சமீபத்தில் ஒரு தமிழ் படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. திவ்யா, வெளிநாட்டில் படித்து வருகிறார். 

விஜய்யின் மனைவி சங்கீதா, இலங்கையை சேர்ந்தவர் என்றும் இவரது தந்தை, லண்டனில் பெரிய தொழிலதிபர் என்றும் கூறப்படுகிறது. 

சங்கீதாவும் விஜய்யும், சென்னையில் தங்கி வந்தனர். ஆனால், தற்போது இவர்கள் இருவரும் ஒன்றாக இல்லை என்றும் சங்கீதா, லண்டனுக்கு குடிபெயர்ந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. 

சங்கீதா, முன்னர் தனது கணவரின் அனைத்து விழாக்களிலும் கலந்து கொள்வார். ஆனால், கடந்த சில வருடங்களாக அவர் எந்த படத்தின் விழாக்களிலும் கலந்துகொள்ளவில்லை. இதற்கான காரணம் குறித்தும் எந்த தகவலும் வெளியாகவில்லை. 

சங்கீதா, சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஷங்கரின் மகள் திருமண விழாவில் கலந்து கொண்டார். அதில் கூட, விஜய் அல்லாமல் தனியாக தனது பிள்ளை ஜேசன் சஞ்சயுடன் கலந்து கொண்டார். 

விஜய், ஒரு பக்கம் படங்களில் நடித்துக்கொண்டும் அரசியல் பணிகளிலும் பிசியாக இருக்க, அவரது மனைவி சங்கீதா எங்கு இருக்கிறார் என்பது குறித்த விவரங்களே தெரியாமல் இருந்தது. 

தற்போது, சங்கீதாவின் ரீசண்டான புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் அவர், ஸ்டைலாக உடை உடுத்தி போஸ் கொடுத்திருப்பது, ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link