கண்களால் கிறங்கடிக்க வைக்கும் திவ்யபாரதியின் க்ளிக்ஸ் !

Sun, 02 Jan 2022-6:14 pm,

சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சிலர் (bachelor) படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் திவ்யபாரதி.  ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு கதாநாயகிகள் ட்ரெண்டாகி வரும் நிலையில், இப்படத்தின் மூலம் நடிகை திவ்யபாரதி ட்ரெண்டாகியுள்ளார்.

 

இன்றைய இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.  தனது முதல் படத்தின் மூலமே ஏராளமான ரசிகர்களின் மனதை வென்றுள்ளார்.  தற்போது ட்ரெண்டிங்காக இணையத்தில் அதிகமாக உலா வரும் முகமென்றால் அது இவர்தான்.

 

இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிடும் புகைப்படங்களை பார்க்கவே பல ரசிகர்கள் ஆர்வமாய் காத்திருப்பார்கள்.  இதுபோன்ற போட்டோக்கள் தான் அவருக்கு பட வாய்ப்பையே பெற்று தந்தது.  

 

சமீபத்தில் இவர் இன்ஸ்டாவில் நீல நிற மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்களை கவர்ந்துள்ளது.  அதில் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள், நீங்கள் நீங்களாக இருங்கள் என்பது போல கேப்ஷனுடன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.  இதற்கு ரசிகர்கள் பலரும் லைக், கமெண்டுகளை வாரி வழங்கி வருகின்றனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link