காஜல் அகர்வாலின் ஜெராக்ஸாக இருக்கும் அவரது தங்கை!! வைரல் போட்டோக்கள்..
காஜல் அகர்வால், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தென்னிந்தியாவின் பிசியான ஹீரோயினாக வலம் வந்தார்.
இவருக்கு 2020ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இதையடுத்து, 2022ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
திருமணம் மற்றும் குழந்தைக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக திரையுலகில் இருந்து விலகிய அவர், தற்போது எப்போதாவது ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
காஜல் அகர்வாலுக்கு ஒரு தங்கை இருக்கிறார். அவரது பெயர் நிஷா அகர்வால். இவருக்கு 2013ஆம் ஆண்டே திருமணம் ஆகிவிட்டது.
நிஷா அகர்வால் தெலுங்கில் சில படங்களில் நடித்திருக்கிறார். தமிழிலும், ‘இஷ்டம்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
நிஷா அகர்வாலுக்கும் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. காஜலும் நிஷாவும் அடிக்கடி தங்களது குடும்பத்தினருடன் சந்தித்துக்கொள்வதுண்டு.
நிஷா அகர்வாலின் பிறந்தநாளையொட்டி அவரது அக்கா சில புகைப்படங்களை பதிவிட்டு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.