பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட நடிகை க்ரித்தி ஷெட்டி?
ரொமாண்டிக் த்ரில்லர் திரைப்படமான 'உப்பென்னா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பல ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளையடித்தவர் இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி.
முன்னர் பாலாவின் 'வணங்கான்' படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக க்ரித்தி ஒப்பந்தமாகியிருந்தார். அதன்பிறகு பாலா-சூர்யா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படத்திலிருந்து சூர்யா விலக, படத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில் இப்படத்திலிருந்து க்ரித்தியும் விலகினார்.
க்ருத்தி ஷெட்டியின் நடிப்பில் கடைசியாக வெளியான இரண்டு தெலுங்கு/தமிழ் இருமொழிக படங்களான 'வாரியர்' மற்றும் 'கஸ்டடி' ஆகிய இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது.
இன்னும் 20 வயது கூட நிரம்பாத க்ரித்தி ஷெட்டி தன்னை வயதான தோற்றத்தில் காண்பிக்க, பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருப்பதாக தெலுங்கு திரையுலகில் வதந்திகள் பரவிய நிலையில், நடிகை கடும் அப்செட்டில் இருந்து வருகிறார்.
தன்னை பற்றி வரும் வதந்திகள் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் கவலையளிப்பதாகவும், சில சமயம் ஹேர்ஸ்டைல் மாற்றுவதால் முகத்தோற்றம் வேறு மாதிரி தெரிகிறது என்றும், அதிகமாக மேக்கப் போடுவதால் சில சமயம் முகத்தோற்றம் வேறுபட்டு காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.