திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குஷ்பூ! என்ன ஆனது?
குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் மருத்துவமனைப் படுக்கையில் இருந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ட்விட்டரில் படத்தைப் பகிர்ந்த குஷ்பு, "மீண்டும் பாதையில்! மீண்டும் என் கோசிக்ஸ் எலும்புக்கான (வால் எலும்பு) சிகிக்சையை மேற்கொண்டேன். அது முழுமையாக குணமாகும் என்று நம்புகிறேன்" என்று எழுதியுள்ளார்.
குஷ்பு 90களில் மலையாளம், கன்னடம், ஹிந்தி தவிர தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தார்.
அவர் குழந்தை நடிகையாக தனது வாழ்க்கையைத் தொடங்கி, பிரபலமான கதாநாயகியாக மாறினார். நட்சத்திர நடிகையான இவர் தொலைக்காட்சி தொடர்களிலும், ரியாலிட்டி ஷோ தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இயக்குனர் சுந்தர் சியை 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட குஷ்புக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.