Nayanthara : குட்டி விக்னேஷ் சிவனை இடுப்பில் வைத்திருக்கும் நயன்தாரா! வைரல் புகைப்படங்கள்..

Fri, 31 May 2024-11:10 am,

கோலிவுட் உலகில், கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக ஜொலித்து வருபவர், நயன்தாரா. இவர், முதன் முதலில் சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படத்தில் அறிமுகமானார். 

திரையுலகில் ஜாலியான நாயகியாக இருந்த நயன், இதுவரை தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்திருக்கிறார். கமல்ஹாசனுடன் மட்டும்தான் இவர் இன்னும் சேர்ந்து நடிக்கவில்லை.

தொடர்ந்து இரண்டு காதல் தோல்விகளுக்கு பிறகு தனது சினிமா பயணத்தில் மட்டும் கவனம் செலுத்திய நயன், 2015ஆம் ஆண்டு நானும் ரௌடி தான் படம் மூலம் விக்னேஷ் சிவனை சந்தித்தார். அப்போது இருவருக்கும் காதல் பற்றிக்கொண்டது. 

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். 

நயனும்-விக்னேஷ் சிவனும் 2022ஆம் ஆண்டின் இறுதியி சர்ரகஸி முறையில் இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்டனர். இந்த குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் என் சிவன் மற்றும் உலக் ருத்ரோனில் என் சிவன் என பெயர் வைத்தனர். 

சர்ரகஸி முறையில் குழந்தை பெற்றுக்கொண்டதற்கு நயன்தாராவும் விக்கியும் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தனர். ஆனால் அவையெல்லாம் ஆரம்பித்த இடம் தெரியாமல் சில நாட்களிலேயே காணாமல் போனது. 

நயன்தாரா தற்போது தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  பகிர்ந்திருக்கிறார். 

இதை பார்த்த ரசிகர்கள், குழந்தைகள் இருவரும் நயன்தாராவின் பாதியாகவும் விக்னேஷ் சிவனின் மீதியாகவும் இருப்பதாகவும் கூறி வருகின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link