Actress Oviya: எதற்கும் அசராத நடிகை ஓவியா... என்ன படிச்சிருக்காங்க தெரியுமா?

Sun, 13 Oct 2024-5:10 pm,
Actress Oviya

நடிகை ஓவியா கேரளாவை சேர்ந்தவர். இவரின் இயற்பெயர் ஹெலன் என கூறப்படுகிறது. 33 வயதான ஓவியா மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு ஹிந்தி திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். 

 

Actress Oviya

2007ஆம் ஆண்டு கங்காரூ என்ற மலையாளத் திரைப்படம் மூலம் திரையுலகிற்கு ஓவியா அறிமுகமானார். தமிழில் நாளை நமதே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானதாக கூறப்பட்டாலும், விமல் உடன் ஓவியா நடித்த களவாணி திரைப்படம்தான் தமிழில் அவருக்கு பெரும் அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்தது. 

 

Actress Oviya

அதன்பின் தமிழில், மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, சில்லுனு ஒரு சந்திப்பு, மூடர்  கூடம், மதயானை கூட்டம், புலிவால், யாருமிக்க பயமேன், சண்டமாருதம், 144, ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

 

2017ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஓவியா பங்கேற்று, ஏகோபித்த ஆதரவை பெற்றார். அவரின் துணிச்சலான பேச்சு, பயமில்லாத செயல்பாடு ஆகியவை மக்களிடையே பெரும் வரவேற்றை பெற்றுக் கொடுத்தது. 

 

இவருக்கும் நடிகர் ஆரவ்விற்கும் பிக்பாஸ் வீட்டிலேயே காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. அப்போது ஓவியாவின் 'மருத்துவ முத்தம்' மிகவும் பிரபலமான ஒன்றாக சர்ச்சையாக்கப்பட்டது. இவை அனைத்தையும் கடந்த ஓவியாவுக்கு தனி ரசிகர்கள் படையே இருந்தது எனலாம். 

 

Oviya Army மூலம் ஓவியாவுக்கு அப்போது பெரும் ஆதரவு உண்டானது என்றாலும் சில தனிப்பட்ட காரணங்களுக்காக ஓவியா 100 நாள்கள் பிக்பாஸ் வீட்டில் தங்காமல் 41 நாளிலேயே வெளியே வந்துவிட்டார். அந்த 41 நாளிலேயே அவர் பெரும் படைய சம்பாதித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பின்னர் அவருக்கு 90ML, கணேசா மீண்டும் சந்திப்போம், முனி 4: காஞ்சனா 3, ஓவியாவ விட்டா யாரு, களவாணி 2 உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. தற்போது சில திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார். 

 

தற்போது நீண்ட நாள்களுக்கு பின்னர் ஓவியா சமூக வலைதளங்களில் வெளிச்சத்திற்கு வந்துள்ளார் எனலாம். அதாவது, ஏதோ ஆபாச வீடியோ லீக் ஆன நிலையில் அதில் இருப்பது ஓவியா தான் என ஒரு சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு அந்த வீடியோவை தொடர்ந்து பகிர்ந்து வந்தனர். இதற்கு தனியே விளக்கம் ஏதும் கொடுக்க விரும்பாத ஓவியா, நேற்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூலாக ஒரு புகைப்படத்தை பதிவிட்டார். அதன் கமெண்ட்ஸ்களில் பலரும் அந்த வீடியோ குறித்து கேள்வி எழுப்ப ஓவியா அவற்றை அசால்ட்டாக கையாண்டு கவனத்தை பெற்றார். அவரின் இந்த மனோதிடம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில் பலரும் ஓவியாவின் கல்வித் தகுதி குறித்து தெரிந்துகொள்ள விரும்புகின்றனர். முன்னர் கூறியது போல் நடிகை ஓவியா கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஆவார். அவர் திருச்சூரில் உள்ள விமலா கல்லூரியில் படித்தார் என்றும் இளங்கலை ஆங்கிலம் பயின்றார் என்றும் தகவல்கள் கூறுகின்றன. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link