லீக் ஆன வீடியோ? லிங்க் கேட்டவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகை ஓவியா!

Sun, 13 Oct 2024-9:49 am,

சமூக ஊடகங்களால் பல நல்ல விஷயங்கள் நடந்தாலும், சில சமயம் ஒரு தனி நபருக்கு எதிராக திரும்புகின்றன. இணையத்தில் நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் வெளியாவது அவ்வப்போது நடக்கிறது. தற்போது நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

இந்நிலையில் ரசிகர்கள் பலரும் ஓவியாவை டேக் செய்து இந்த வீடியோ பற்றி கேட்டு வந்தனர். இது உண்மையான வீடியோவா? வீடியோவில் இருப்பது நீங்கள் தானா? போன்ற பல கேள்விகளை கேட்டு வந்தனர்.

 

இந்த கேள்விகளுக்கு சற்றும் சளைக்காத வகையில் ஓவியா பதிலடி கொடுத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஒரு பயனர், "உங்களின் 17 வினாடி வீடியோ லீக் ஆனது மேடம்" என்று கருத்து தெரிவிக்க, அதற்கு ஓவியா "என்ஜாய்" என்று பதிலளித்துள்ளார்.

 

மற்றொரு பயனர், "வீடியோவின் நீளம் மிகவும் குறைவாக உள்ளது. அதிக நீளமுள்ள வீடியோ கிடைக்குமா" என்று கமெண்ட் செய்திருந்தார். அதற்கு ஓவியா, 'அடுத்த முறை ப்ரோ' என கூலாக பதில் அளித்துள்ளார். 

 

மேலும் சமூக ஊடகங்களில் பலர் ஓவியாவின் லீக் ஆனா வீடியோவை தனக்கும் அனுப்புமாறு கேட்டு வருகின்றனர். இதற்கும் பதிலடி கொடுக்கும் விதமாக தனக்கும் லிங்க் அனுப்புமாறு ஓவியா பதிவிட்டுள்ளார்.

 

பொதுவாக நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் வெளியானால் அது நான் இல்லை என்று மறுப்பு தெரிவிப்பார்கள். ஆனால் ஓவியா இதனை வேறு விதத்தில் டீல் செய்து வருகிறார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link