`நான் உயிரோட தான் இருக்கேன்`.. பார்வதி நாயர் கிளாமர் போட்டோஷூட்
தமிழில் பார்வதி நாயர் நடித்த முதல் படமே அஜித்துடன் தான். அஜித் - கெளதம் மேனன் கூட்டணியில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் விக்டர் என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் பார்வதி.
மாடலிங் துறையில் கலக்கிய பார்வதி நாயர், மிஸ் கர்நாடகா அழகிப் போட்டியில் கலந்துகொண்டு டைட்டிலும் வென்றார்.
தமிழில் பார்வதி என்னை அறிந்தால், கமல்ஹாசன் உடன் உத்தம வில்லன் படத்தில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி கன்னடம், இந்தி, மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் இவர் நடித்திருக்கிறார்.
இந்தியில் 1983-ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பை வென்றதை மையமாக வைத்து உருவான 83 என்கிற திரைப்படத்தில் கவாஸ்கர் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நடிகை பார்வதி நாயர் தற்போது தளபதி விஜய்யின் கோட் படத்தில் முக்கிய கேரக்டரில் அவர் நடித்து வருகிறார்.
சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்கும் பார்வதி நாயர், அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவார். ஆனால் கடந்த சில மாதங்களாக அவர் இனஸ்டாவில் ஆக்டிவாக இல்லை.
நடிகை பார்வதி நாயர் தற்போது கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். கருப்பு சேலையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பதிவிட்டுள்ள அவர், நாம் உயிரோடு தான் இருக்கிறேன். உங்கள் அன்பான மெசேஜுக்கு நன்றி என பதிவிட்டு இருக்கிறார்.