பளிங்கு போல் மின்னும் பிரியா ஆனந்தின் வைரல் புகைப்படங்கள்!
நடிகை பிரியா ஆனந்த் தமிழ் மொழிப்படங்கள் மட்டுமல்லாது மலையாளம், ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழிப்படங்களில் நடித்துள்ளார்.
ஆரம்பத்தில் மாடலிங் செய்தவர் தமிழில் 2009ஆம் ஆண்டு வெளியான வாமனன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
2013-ம் ஆண்டு வெளியான எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் இவர் ரசிகர் மத்தியில் அதிகளவில் பிரபலம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்தவர் சமீபத்தில் ஆர்ஜே.பாலாஜியுடன் 'எல்கேஜி' படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றார்.
தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு ஸ்லீவ்லெஸ் உடையில் பிரியா ஆனந்த் சமூக வலைத்தளங்களான டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. இவரை தோற்றத்தைக் கண்டு ரசிகர்கள் பலரும் இதய எமோஜிகளை பதிவிட்டு வருகின்றனர்.