சில விஷயங்கள் எனக்கு சரியாக அமையவில்லை - வருத்ததுடன் சமந்தா !
)
சமந்தா மாடலிங் மற்றும் நடிப்பு இரண்டில் தன்னை அதிகமாக ஈடுபடுத்தி வருகிறார். அந்த வகையில் சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைத்தன்யா பிரிவில் பல சிக்கல்களான பேச்சுகள் எழுந்துள்ளது. அதெல்லாம் துளியளவு காதில் பொருட்படுத்தாமல் இருந்து வந்தார்.
)
சமந்தா நாகசைத்தன்யா பிரிவு அவர்களின் ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் கொண்டுசென்றது. மேலும் சமந்தா அதிலிருந்து மீண்டு வருவதற்காக யோகா, உடற்பயிற்சி செய்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தி வந்தார்.
)
சமந்தா பொதுவாக அழகு கலந்தத் திறமையானவள் என்று பலரும் கூறியதை அறிந்திருப்போம். ஆனால் சமந்தாவிற்கு ஆரம்பத்தில் சினிமாவில் பல சருக்கள் ஏற்பட்டது. ஒரு சில படங்களே வெற்றிப் படங்களாக வந்தது. பல படங்கள் தோல்வியில் முடிந்தது.
சமந்தா புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூனுடன் நடனம் ஆடிய ‘ஊ சொல்றீயா’ பாடல் எதிர்ப்பார்பைவிட மிகப்பெரிய வெற்றியை இந்த பாடல் சமந்தாவிற்கு பெற்று தந்தது.
சமந்தா நடிப்பில் வெளியான சாகுந்தலம், குஷி மற்றும் யசோதா போன்ற படங்கள் எதிர்ப்பார்த்ததைவிட பெரிதாக வெற்றியடையவில்லை. பாதி தோல்வியில் முடிந்தது. ஆனாலும் சமந்தா அதனை சரிசெய்ய தீவிரமாக படங்களில் ஆர்வம் காட்டி வந்தார்.
சமீபத்தில் ஆலியா பட்டுடன் சமந்தா நடித்த ‘ஜிக்ரா’ தெலுங்கு படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் வேலைகள் முழுமையாக நிறைவடைந்தது.
‘ஜிக்ரா’ படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் ஆலியா பட், சமந்தா குறித்துப் பேசியபோது அவர் மனம்நெகிழ்ந்து வியந்துப் பார்த்திருந்தார். திடீரென்று ஊ சொல்றியா பாடல் அரங்கில் உரைத்ததும் ஆலியா பட் மற்றும் சமந்தா இருவரும் ஜோடியாக வைப் செய்தனர்.
சமந்தா தனது தோல்வி மற்றும் கஷ்டங்கள் வருவதுக் குறித்துப் பேசியபோது ‘தன்னுடைய வாழ்க்கையில் கடந்த காலத்தில் நான் தவறுகள் செய்திருக்கிறேன் என்று ஒப்புகொள்கிறேன்’ எனவும் சில விஷயங்கள் சரியாக அமையவில்லை அதனை நான் முழு மனதாக ஏற்றுக்கொள்கிறேன் என்று ஓப்பனாக கூறியுள்ளார்.