புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நடிகை சமந்தா! ஏன் தெரியுமா?

Sun, 10 Dec 2023-8:03 pm,

நடிகை சமந்தா ரூத் பிரபு ஞாயிற்றுக்கிழமை தனது ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் மூலம் படங்கள் தயாரிப்பில் இறங்கப்போவதாக அறிவித்துள்ளார்.  

 

சமந்தா நடிப்பில் கடந்த சில ஆண்டுகளில் வெளியான சூப்பர் டீலக்ஸ், தி ஃபேமிலி மேன் 2 போன்ற படங்கள் ஹிட் அடித்தன.  

 

சமீபத்தில் சமந்தா ஒரு அரியவகை நோயால் அவதிப்பட்டு வருகிறார்.  இதனால் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி உள்ளார். 

 

இந்நிலையில், தற்போது தயாரிப்பு நிறுவனம் தொடங்கி உள்ளார்.  "எனது தயாரிப்பு நிறுவனமான ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ்ஐ அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நமது சமூக கட்டமைப்பின் வலிமை மற்றும் சிக்கலான தன்மையைப் பற்றி பேசும் கதைகளை தயாரிக்க உள்ளேன்" என்று கூறி உள்ளார்.

 

நடிகை சமந்தா சமீபத்தில் தெலுங்கில் "குஷி" படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்தார். அவர் அடுத்து பிரைம் வீடியோவின் ​​“சிட்டாடல்” என்ற தொடரில் வருண் தவானுடன் இணைந்து நடிக்கவுள்ளார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link