அடையாளம் தெரியாமல் மாறி போன டாப்ஸி! வைரல் ஆகும் புகைப்படங்கள்!
)
டாப்சி பன்னு இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது அதிகம் பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
)
டாப்சி பன்னு தனது சிறந்த நடிப்பிற்காக இரண்டு பிலிம்பேர் விருதுகள் மற்றும் பிலிம்பேர் OTT விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
)
ஆரம்பத்தில் மாடலிங் துறையில் இருந்த டாப்ஸி 2010 ஆம் ஆண்டு தெலுங்குத் திரைப்படமான ஜும்மண்டி நாடம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
பின்னர் தமிழில் 2011 ஆம் ஆண்டு ஆடுகளத்தில் நடித்து பிரபலமானார். தனுஷ் நடித்து இருந்த இந்த படத்தை வெற்றிமாறன் இயக்கி இருந்தார்.
சாஷ்மே படூர் என்ற ஹிந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் டாப்ஸி. அதன்பின்பு பல தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்தார்.
தற்போது சிவப்பு நேர உடையில் டாப்ஸி பதிவிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.