அச்சு அசல் நயன்தாரா மாதிரியே இருக்கும் முன்னாள் சீரியல் நாயகி! வைரல் போட்டோ..
தமிழில் 2023ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி வந்த தொடர், தெய்வ திருமகள். இந்த தொடர் பிரபலமாவதற்கும், ஹிட் ஆவதற்கும் பெரிய காரணமாக இருந்தவர் இத்தொடரின் நாயகி வாணி போஜன்.
தெய்வ திருமகள் தொடரில் சத்யா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்த இவர், அன்று சீரியல் பார்த்த இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு கரஷ்ஷாக இருந்தார். இவரது துணிச்சலான கதாப்பாத்திரம் பலரை கவர்ந்தது.
வாணி போஜன், சீரியல்கள் மூலம் பிரபலமானதை தொடர்ந்து திரையுலகில் நடிக்க வந்தார். தமிழில் சீரியலில் நடிக்க வந்ததற்கு முன்னரே, இவர் சில தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.
2019ஆம் ஆண்டு ஓ மை கடவுளே படத்தில் மீரா எனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து கோலிவுட்டிற்குள் எண்ட்ரி கொடுத்தார்.
அடுத்து, லாக் அப் படத்திலும் நடித்தார். தொடர்ந்து மலேசியா டூ அம்னீசியா, ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும், மிரள் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
வாணி போஜன், தற்போது தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் கதாநாயகியாக மாறிவிட்டார். இவர் நைத்த செக்களம் தொடரும் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.
வாணி போஜனை பலர் ‘சின்னத்திரை நயன்தாரா’ என கூறியதுண்டு. காரணம், இவர் பார்ப்பதற்கு நயன்தாரா போல இருப்பதாக ரசிகர்கள் அப்படி அழைக்கின்றனர்.
வாணி, சமீபத்தில் ஒரு போட்டோ ஷூட்டை நடத்தியிருக்கிறார். அதில் பார்ப்பதற்கு அச்சு அசல் அவர் நயன்தாரா போலவே இருப்பதாக ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர்.