SeePic`s: நடிகை வித்யூ ராமனின் திருமண நிச்சயதார்த்த புகைபடங்கள் வைரல்!
கௌதம் மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா நடித்த நீதானே என் பொன்வசந்தம் படம் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் வித்யூ ராமன்.
அந்த படத்தில் அவரது நடிப்புக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தமிழ், தெலுங்குமொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எடை குறைந்த நிலையில் ஸ்லிம்மாக இருக்கும் ஃபோட்டோவையும், தனது முந்தைய தோற்றத்தையும் ஒப்பிட்டு தகவல் பகிர்ந்திருந்தார். அவரது பதிவு மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறித்து புகைப்படங்கள் பகிர்ந்துள்ளார்.
அதில் தனக்கு நிச்சயதார்த்தம் கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி நெருங்கிய உறவினர்கள் சூழ நடைபெற்றதாக குறிப்பிட்டார். இதனையடுத்து அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.