சுகர் நோயாளிகளுக்கு சுகமளிக்கும் உணவுகள் இவைதான்: கண்டிப்பா சாப்பிடுங்க
நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும். இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காத உணவுகளை இவர்கள் உட்கொள்ள வேண்டும். சில உணவுகள் நாள் முழுதும் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்கின்றன. இவை உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கின்றன. அந்த உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
நெல்லிக்காய்: நெல்லிக்காய் பல வித ஆரோக்கிய நன்மைகள் கொண்டுள்ளது. இதில் குரோமியம் அதிகமாக உள்ளது. இது கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தும் ஒரு கனிமமாகும். இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பதோடு நெல்லிக்காய் உடலுக்கு தேவையான ஊச்சத்துகளை அளித்து, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
வேம்பு: வேம்பு, குளுக்கோஸ் டிரான்ஸ்போர்ட்டர் 4 (GLUT4) மற்றும் குளுக்கோசிடேஸ் போன்ற முக்கிய குடல் நொதிகளைத் தடுத்து அதன் மூலம் அதிக குளுக்கோஸ் உரிஞ்சப்படுவதை சீர் செய்கிறது. இரத்த சர்க்கரை நோய் இருந்தால், வேப்பம்பூ, வேப்பிலை, வேம்பு பொடி ஆகியவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து சாறு குடிக்கலாம். வேப்பிலையை அப்படியே கடித்தும் சாப்பிடலாம்.
முழு தானியங்கள்: முழு தானியங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க ஆரோக்கியமான வழிகளில் உதவுகின்றன. பார்லி, ஓட்ஸ், திணை வகைகள் போன்ற முழு தானியங்களை சுகர் நோயாளிகள் தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். முழு தானியங்கள் சுகர் லெவலை குறைப்பதோடு இவற்றின் மூலம் இன்னும் பல வித ஆரோக்கிய நன்மைகளும் உடலுக்கு கிடைக்கின்றன.
நாவல் பழங்கள்: நாவல் பழங்களில் ஜாம்போலின் என்ற கலவை உள்ளது. இந்த கலவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஜாமூன் மிகவும் பயனுள்ள ஒரு பழமாக இருக்கும். இதில் இன்னும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன.
இலவங்கப்பட்டை: இது இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இந்த மசாலா இன்சுலின் விளைவுகளை உடலுக்கு ஏற்றவாறு சீர் செய்யும் என்று பல ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன. இன்சுலின் என்பது ஒரு ஹார்மோன். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையை நீக்குகிறது. இரத்த சர்க்கரை அதிகமாக உள்ளவர்கள் இலவங்கப்பட்டை தேநீர் அல்லது தண்ணீர் குடிக்கலாம். இதை உணவிலும் பயன்படுத்தலாம்.
பாகற்காய்: பாகற்காய் உடலில் இரத்த சர்க்கரையை குறைக்க பெரிய அளவில் நன்மை பயக்கும். பாகற்காயில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. இது குளுக்கோஸை உயிரணுக்களுக்கு ஆற்றலைக் கொண்டுவர உதவுகிறது. பாக்றாய் கொழுப்பை குறைக்கவும் உதவுகின்றது.
சியா விதைகள்: நீரிழிவு நோயை கட்டுப்படுத்த நீரிழிவு நோயாளிகள் சியா விதைகளை தினமும் உட்கொள்ளலாம். சியா விதைகளில் கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து ஆகியவற்றுடன் பல வித ஆரோக்கிய நன்மைகள் அதிகமாக உள்ளன. இவை இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன.
ஆளி விதையில் பல வித ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. ஆளி விதையில் நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் லிக்னான்கள் அதிகமாக உள்ளன. ஆளி விதைகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் இன்சுலின் சென்சிடிவிட்டியை மேம்படுத்தவும் உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.