Adipurush: ‘இந்த படம் எனக்கு அடிச்ச லக்..’ ஆதிபுருஷ் படவிழாவில் நடிகர் பிரபாஸ் பேச்சு!
உலகளவில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள படம், ஆதிபுருஷ். இந்த படத்திற்காக ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்போடு உள்ளனர்.
இராமாயண கதையை வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், ராமனாக பிரபாஸ் நடிக்கிறார். சீதாவாக கிருத்தி சனோன் நடிக்கிறார்.
பான் இந்தியா அளவில் வெளியாகும் இப்படம், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ளது. தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்படுகிறது.
ஆதிபுருஷ் படவிழா, நேற்று திருப்பதியில் கோலாகலமாக நடைப்பெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான ரசிகர்களும் கலந்து கொண்டனர்.
பிரபாஸ், கிருத்தி சனோனை பார்த்ததும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். விழா மேடையேறி பேசிய பிரபாஸ், “ஆதிபுருஷ் படம் தனக்கு கிடத்தது அதிர்ஷம்” என்று கூறினார்.
ரசிகர்கள் பிரபாஸை அதிகம் பேச சொல்வதாக கூறிய அவர், “இனி அதிகம் பேசமாட்டேன். ஆனால் வருடத்திற்கு 2-3 படங்களில் நடிப்பேன்” என கூறினார்.
ஆதிபுருஷ் படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியானது. இந்த ட்ரைலர் குறித்த மீம்ஸ்கள் தற்போது இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த புது ட்ரைலர் பார்ப்பதற்கு வீடியோ கேம் போல இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.
வரும் 16ஆம் தேதி வெளியாகவுள்ள ஆதிபுருஷ் படம், போட்ட அதிக பட்ஜெட்டை மீண்டும் எடுக்குமா என்பது வர வர கேள்விக்குறியாகி வருகிறது.