அட்டகாசமான ஸ்டைலுடன் குறைவான விலையில் எம்ஜி விண்ட்ஸ்டர் கார்! பேட்டரிக்கு வாடகை ஏன்?

Thu, 12 Sep 2024-1:37 pm,
MG Windsor EV

JSW உடன் கூட்டாண்மையை அறிவித்த பிறகு வெளியாகும் வின்ட்சரின் முதல் தயாரிப்பு இது. ZS EV மற்றும் கோமெட் மாடலுக்குப் பிறகு எம்ஜி நிறுவனத்தின் மூன்றாவது மின்சார வாகனம் இது

MG Windsor EV Free Charging

வின்ட்சரின் இந்த காரில் பேட்டரி வாடகை அடிப்படையில் கிடைக்கிறது. அதாவது காரின் விலையில் பேட்டரியின் விலை சேர்க்கப்படவில்லை 

MG Windsor -BaaS

MG இதை பேட்டரி-ஆஸ்-எ-சர்வீஸ் (BaaS) என்று அழைக்கிறது. அங்கு வாங்குபவர்கள் ஒரு கிலோமீட்டருக்கு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும். அதன்படி, ஒரு கி.மீ.க்கு ரூ. 3.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

 

ஆட்டோமொபைல் நிறுவனத்தின் வாடகை பேட்டரி என்ற இந்த வித்தியாசமான உத்தியானது, வாகனத்தின் செலவு மற்றும் கிலோமீட்டருக்கான பயண செலவையும் குறைக்கிறது 

வின்ட்சர் கார் மாடலானது எக்சைட், எக்ஸ்க்ளூசிவ் மற்றும் எசென்ஸ் ஆகிய மூன்று டிரிம்களில் கிடைக்கிறது.  

ஸ்டார்பர்ஸ்ட் பிளாக், பேர்ல் வைட், களிமண் பழுப்பு மற்றும் டர்க்கைஸ் கிரீன் ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது. Eco+, Eco, Normal மற்றும் Sport ஆகிய நான்கு டிரைவிங் மோடுகளையும் வின்ட்சர் பெறுகிறது.

வின்ட்சர் 38kWh LFP பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. ப்ரிஸ்மாடிக் செல்கள் உடன் 331கிமீ வரம்பைக் கொண்டுள்ளது. முன் அச்சில் பொருத்தப்பட்ட மோட்டார் 136hp மற்றும் 200Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது.   

வின்ட்சர் 45 கிலோவாட் சார்ஜரைப் பயன்படுத்தி 55 நிமிடங்களில் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்யலாம்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link