Chennai ராணுவ அகாடமியில் ஆப்கன் பெண் அதிகாரிகள் பயிற்சி
6 வார பயிற்சி வகுப்பின் ஒரு பகுதியாக, ஆப்கானிஸ்தான் தேசிய ராணுவத்தைச் சேர்ந்த 20 பெண்கள் தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள ராணுவ அதிகாரி பயிற்சி அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இரண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரையிலான பணிகளில் நியமிக்கப்படுகின்றனர். ராணுவத் தளவாடங்கள், மனித வளங்கள், வானொலி தகவல் தொடர்பு மற்றும் மருத்துவக் கிளைகளில் பெண் அதிகாரிகள் பணிபுரிகின்றனர்.
சென்னையில் உள்ள OTA இல், ஆயுதங்களைக் கையாளும் அதிகாரிகள்
தந்திரோபாயம், தகவல் தொடர்பு, ராணுவ நிர்வாக திறன்களை வளர்த்துக் கொள்ள பயிற்சி அளிக்கப்படுகின்றன
இந்திய ராணுவம் 2017 முதல் ஆப்கானிய ராணுவத்தை சேர்ந்த பெண்களுக்கு இதுபோன்ற சிறப்புப் பயிற்சிகளை வழங்குகிறது. இது நான்காவது ஆண்டாக தற்போதும் தொடர்கிறது
2020 க்குள் ஆப்கானிய பாதுகாப்புப் படைகளில் 10% பெண்களின் பிரதிநிதித்துவம் இருக்கவேண்டும் என்று ஆஃபன் அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் அது, இதுவரை சாத்தியமாகவில்லை. தற்போது ஆப்கானிய படைகளில் சுமார் 4,500 பெண்கள் பணிபுரிவதாக கூறப்படுகிறது. இது அவர்களின் மொத்த ராணுவ பலத்தில் 1.4% மட்டுமே.