தனது மனைவியை விவாகரத்து செய்யும் இயக்குனர் சீனுராமசாமி!
இயக்குனர் சீனு ராமசாமி திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் கவிஞர் என பன்முக கலைஞனாக உள்ளார். 2007ம் ஆண்டு வெளியான கூடல் நகர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
இருப்பினும் தென்மேற்கு பருவக்காற்று படம் தான் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இந்த படம் தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது பெற்றது. மேலும் விஜய் சிறப்பு நடுவர் விருதையும் பெற்றது. இந்த படத்தின் மூலம் தான் விஜய் சேதுபதி அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து நீர்ப்பறவை, தர்ம துரை, மாமனிதன் போன்ற நிறைய தரமான படங்களை இயக்கி உள்ளார். கடைசியாக இவரது இயக்கத்தில் கோழிப்பண்ணை செல்லதுரை படம் வெளியானது.
இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி தனது மனைவியை விவாகரத்து செய்ய உள்ளதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக சீனு ராமசாமி X தளத்தில் பதிவிட்டுள்ளார். " நானும் எனது மனைவி G S தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம். இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன். அவரும் அறிவார். இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கம்" என்று தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக தமிழ் சினிமாவில் விவாகரத்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது அந்த பட்டியலில் சீனு ராமசாமியும் இணைந்துள்ளார்.