குழந்தைகளுக்கு மொபைல் போன் விற்பனை! அரசின் முக்கிய முடிவு!
குழந்தைகள் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாவதை தடுக்க ஸ்பெயின் அரசு புதிய நடைமுறைகளை செயல்பாட்டில் கொண்டு வந்துள்ளது. அதன்படி ஸ்மார்ட் ஃபோன்களிலும் சிகிரேட் அட்டைகளை போல சுகாதார எச்சரிக்கை லேபிள் இடம்பெற வேண்டும் என்று சட்டம் வகுத்துள்ளது.
குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஸ்பெயின் அரசாங்கம் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. அவர்கள் சமர்ப்பித்த 250 பக்க அறிக்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் வழங்கும் எச்சரிக்கை லேபிளில், டிஜிட்டல் சேவை மற்றும் அதிகப்படியான பயன்பாடு எவ்வாறான ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்பது குறித்து இடம் பெற்றிருக்க வேண்டும்.
13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் யாரும் ஸ்மார்ட் போனை பயன்படுத்தக் கூடாது என்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மேலும் 12 வயது உட்பட்ட குழந்தைகள் யாரும் சமூக வலைதளங்களை பயன்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
பள்ளிகள் மாணவர்களுக்கு பாரம்பரிய முறைகளை கற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் என்றும், கல்வியில் தொழில்நுட்பம் தொடர்பான சமநிலை பற்றி கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டிற்கு முன்பு ஆஸ்திரேலியா அரசு 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக ஊடக கணக்குகள் பயன்படுத்த தடை என்ற சட்டத்தை அமல்படுத்தியது.