ஐஸ்வர்யா அர்ஜுன்-உமாபதி ராமையாவின் காதல் கதை ஆரம்பித்தது எப்படி?
)
அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவிற்கும், தமிழ் குணச்சித்திர நடிகரான தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் சமீபத்தில் நிச்சதார்த்தம் நடந்தது.
)
ஐஸ்வர்யா, பட்டத்து யானை படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இதையடுத்து அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.
)
தம்பி ராமையாவின் மகன், உமாபதி ராமையா திருமணம், மணியார் குடும்பம், தண்ணி வண்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
உமாபதி, ‘சர்வைவர்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கியிருந்தார்.
‘சர்வைவர்’ நிகழ்ச்சிக்கு பிறகு அர்ஜுன் மற்றும் உமாபதி இடையே நல்ல நட்பு நிலவியதாக கூறப்படுகிறது.
நண்பர்களாக மாறிய இவர்கள், விரைவிலேயே குடும்ப நண்பர்களாக மாறினார்களாம். இதையடுத்து இருவரும் குடும்பங்களாகவும் சந்தித்து கொண்டதாகவும் அப்போது ஐஸ்வர்யா-உமாபதி சந்தித்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர், இருவரும் பழக ஆரம்பித்ததாக சினிமா வட்டாரங்களில் இருந்து சில தகவல்கள் கசிந்துள்ளது.
உமாபதி-ஐஸ்வர்யாவின் காதலுக்கு இருவரது குடும்பத்தினர் கிரீன் சிக்னல் கொடுத்தவுடன் தற்போது நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.