13 வருடங்களுக்கு பிறகு ரசிகர்களுக்கு இரட்டை சர்ப்ரைஸ் கொடுக்கும் அஜித்?

Fri, 07 Jul 2023-2:00 pm,

சீரான இடைவெளியில் வெளியான ‘விஸ்வாசம்’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ மற்றும் ‘துணிவு’ ஆகிய பிளாக்பஸ்டர்களை அஜித் குமாரின் ரசிகர்கள் கொண்டாடினர். ஆனால், பல்வேறு காரணங்களால் அவரது அடுத்த படமான 'விடாமுயற்சி' தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

 

இருப்பினும் நம்பகமான வட்டாரங்களின்படி இன்னும் சில வாரங்களில் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.  இதற்கிடையில் இந்த படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

 

அவர் கடைசியாக 2010 இல் வெளியான 'அசல்' படத்தில் அப்பா மற்றும் மகன் என இரண்டு வேடங்களில் நடித்தார். எனவே இது உண்மையாக மாறினால், 13 வருட நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரது ரசிகர்களுக்கு இரட்டை விருந்தளிப்பார்.

 

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து, அனிருத் இசையமைக்கிறார்.

 

தற்போது தளபதி விஜய்யுடன் 'லியோ' படத்தில் நடித்து வரும் த்ரிஷா நாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘என்னை அறிந்தால்’ எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் மற்றும் த்ரிஷா மீண்டும் திரையில் இணையவுள்ளனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link