இரவு 7 மணிக்கு மேல் டீ குடிப்பவரா நீங்கள்? இந்த பிரச்சனைகள் வரும்!
டீ குடிப்பது நல்லது தான் என்றாலும், அதை அதிகமாகவோ அல்லது தவறான நேரத்திலோ குடிப்பது நல்லது இல்லை. குறிப்பாக மாலையில் டீ குடிப்பது பல தீங்குகளை ஏற்படுத்தும்.
மாலை நேரத்தில் டீ குடிப்பது தூக்கத்தை கெடுத்துவிடும். இதனால் உங்களது தூக்க சுழற்சியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் தூங்குவதில் சிக்கல் இருக்கலாம்.
மாலையில் டீ குடிப்பது சிலருக்கு வாயு மற்றும் வயிற்றுப் பிடிப்பை ஏற்படுத்தும். இது உங்களுக்கு உடலில் அசௌகரியத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
டீயில் உள்ள காஃபின் இதயத் துடிப்பை அதிகப்படுத்தும். எனவே மாலையில் டீ குடிக்கும் போது அதிக பதட்டம் ஏற்படலாம். இதய பிரச்சினை உள்ளவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.
டீ குடிப்பது உடலில் இருந்து நீரை வெளியேற்றுகிறது. மேலும் மாலை நேரத்தில் டீ குடித்தால் உடலில் நீர்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. உடலில் தண்ணீர் இல்லாவிட்டால் தலைவலி, சோர்வு போன்ற உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
மாலை நேரத்தில் டீ குடிப்பதால் வயிற்றில் அமிலத்தன்மை பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. டீ குடிப்பது வயிற்றில் அமில உற்பத்தியை அதிகரிக்கிறது. மேலும் இரவு தூக்கத்தை கெடுக்கிறது.